அப்போ ஹோட்டல் மேனேஜ்மென்ட் டிரெய்னி, இப்போ சினிமா தயாரிப்பாளர்… சாக்ஷி தோனியின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?
சாக்ஷி தோனியின் சொத்து மதிப்பு சுமார் 50 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. சமீபத்திய அறிக்கையின்படி, அவரது கணவரான தோனியின் மொத்த சொத்து மதிப்பு ரூ.1,050 கோடி ஆகும்.
சாக்ஷி தோனியின் சொத்து மதிப்பு சுமார் 50 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. சமீபத்திய அறிக்கையின்படி, அவரது கணவரான தோனியின் மொத்த சொத்து மதிப்பு ரூ.1,050 கோடி ஆகும்.
சாக்ஷி தோனி தனது பள்ளிப் படிப்பை முடித்த பிறகு, அவுரங்காபாத்தில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட்டில் ஹோட்டல் மேனேஜ்மென்ட்டில் பட்டம் பெற்றார்.
முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான எம்.எஸ்.தோனியின் மனைவி சாக்ஷி சிங் ராவத் ஆவார். இவர் கடந்த நவம்பர் 19, 1988 அன்று அசாம் மாநிலம் கவுகாத்தியில் பிறந்தார். நடுத்தர குடும்பத்தில் வளர்ந்த அவர் தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் உள்ள ஜவஹர் வித்யா மந்திரில் தனது பள்ளிப்படிப்பை முடித்தார்.
Advertisment
பள்ளிப் படிப்பை முடித்த பிறகு, அவுரங்காபாத்தில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட்டில் ஹோட்டல் மேனேஜ்மென்ட்டில் பட்டம் பெற்றார். இதன்பிறகு, கொல்கத்தாவில் உள்ள தாஜ் பெங்கால் ஹோட்டலில் பயிற்சியாளராகப் பணியாற்றினார். இதே ஹோட்டலில் தான் 2007 டிசம்பரில் சர்வதேச போட்டிக்கு முன்னதாக டீம் இந்தியா தங்கியிருந்தது.
இந்த நேரத்தில் தான் தோனி முதன்முறையாக சாக்ஷியை சந்தித்தார். அதன்பிறகு இருவரும் காதல் வயப்பட்டனர். இவர்களது திருமணம் 2010ல் டெஹ்ராடூனில் நடந்தது. எந்த ஆர்ப்பட்டமும் இன்றி மிகவும் எளிமையாக அரங்கேறியது. தோனியுடன் திருமணத்திற்குப் பிறகு, மும்பையில் உள்ள தாஜ்மஹால் பேலஸ் ஹோட்டலில் அலுவலகத்தில் பயிற்சியாளராகப் பணியாற்றினார் சாக்ஷி. மேலும், சென்னையில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலான லீலா பேலஸில் மூத்த மேலாளராகப் பணியாற்றினார். ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவுவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட தோனி அறக்கட்டளையின் அறங்காவலராகவும் உள்ளார்.
Advertisment
Advertisements
தோனி - சாக்ஷி தம்பதியருக்கு ஷிவா என்ற ஒரு மகள் உள்ளார். தோனியின் ஓய்வுக்குப் பிறகு, சாக்ஷி தனது கணவர் மற்றும் மகளுடன் ராஞ்சியில் உள்ள தனது கணவரின் பண்ணை வீட்டில் தனது பெரும்பாலான நேரத்தை செலவிடுகிறார். இருப்பினும், சாக்ஷி தோனி, ஹோட்டல் நிர்வாகத்திலிருந்து விலகி, இப்போது முழுநேர திரைப்பட தயாரிப்பாளராகிவிட்டார்.
எம்.எஸ்.தோனி தனது சொந்த திரைப்பட தயாரிப்பு நிறுவனமான ‘தோனி என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட்’ ஐத் தொடங்கினார். இந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தமிழில் லெட்ஸ் கெட் மேரிட் (Lets Get Married-LGM) என்ற தமிழ்த் திரைப்படத்தை தயாரித்துள்ளனர். சாக்ஷி தோனி தான் தோனியின் திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தின் ‘நிர்வாக இயக்குநர்’ என்று அவர்களின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாக்ஷி தோனியின் சொத்து மதிப்பு
சாக்ஷி தோனியின் சொத்து மதிப்பு சுமார் 50 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. சமீபத்திய அறிக்கையின்படி, அவரது கணவரான தோனியின் மொத்த சொத்து மதிப்பு ரூ.1,050 கோடி ஆகும்.
தோனியும் அவரது மனைவி சாக்ஷியும் ஜார்கண்டின் ராஞ்சியில் ஒரு பெரிய பண்ணை வீட்டை வைத்திருக்கிறார்கள். அங்கு அவர்கள் தற்போது தங்கள் மகள் ஜிவாவுடன் வசிக்கிறார்கள், அதன் விலை ரூ. 10 கோடிக்கு மேல் இருக்கும். இந்த தம்பதிக்கு டேராடூனில் ரூ.17.8 கோடி மதிப்புள்ள வீடும் உள்ளது.
தோனிக்கு கார்கள் மற்றும் பைக்குகள் மீது அலாதி பிரியமுண்டு. அவரது மிகவும் விலையுயர்ந்த கார் மற்றும் பைக்குள் குறித்த வீடியோவை முன்னாள் இந்திய வீரரான வெங்கடேஷ் பிரசாத் வெளியிட்டு இருந்தார். அது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது.
தோனியிடம் ஹம்மர் எச்2, ஆடி Q7, மிட்சுபிஷி பஜெரோ எஸ்எஃப்எக்ஸ், லேண்ட் ரோவர் ஃப்ரீலேண்டர், மஹிந்திரா ஸ்கார்பியோ, ஃபெராரி 599 ஜிடிஓ, ஜீப் கிராண்ட் செரோக்கி டிராக்ஹாக், நிசான் ஜோங்கா, போண்டியாக் ஃபயர்பேர்ட் டிரான்ஸ் ஆம், மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ, ரோல்ஸ் ராய்ஸ் சில்வர் ஷேடோ மற்றும் ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் அம்பாசிடர் போன்ற கார்கள் உள்ளன.
ஆர்கானிக் ஃபார்மிங், ட்ரோன்கள், விளையாட்டு உடைகள் மற்றும் ஜிம்கள் என பலதரப்பட்ட வணிகங்களையும் தோனி சொந்தமாக வைத்துள்ளார். இது அவருக்கு வருடத்திற்கு ரூ.4 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டுகிறது.
சாக்ஷி தோனி சமூக ஊடகங்களிலும் பிரபலமாக உள்ளார். அவரது இன்ஸ்டாகிராம் கணக்கில் 5.2 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்கள் உள்ளனர். 2020ல் சர்வதேச ஓய்வுக்குப் பிறகு குறைந்த சமூக ஊடக சுயவிவரத்தை வைத்திருக்க விரும்பும் தனது கணவர் எம்.எஸ் தோனி பற்றிய அப்டேட்டுகளை சாக்ஷி தொடர்ந்து பகிர்ந்து வருகிறார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil