அண்ணியாரிடம் இருந்து வாழ்த்துப் பெற்ற தோனி!

எனது வாழ்க்கையை மிகவும் அழகாக்கியதற்கு நன்றி

By: Updated: July 7, 2018, 02:44:16 PM

தல தோனி இன்று தனது 37வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். என்னது தோனிக்கு 37 வயசாச்சா-னு ஷாக் ஆகாதீங்க!! காலச் சக்கரம் அவ்வளவு வேகமா சுத்துது! தோனி ஒரு கேக்கை வெட்டி பிறந்தநாளை முடித்துக் கொண்டார். ஆனால், அவரது ரசிகர்கள் இன்று முழுவதும் ட்விட்டர் டிரெண்டிங்கில் தோனியை டாப்பில் வைத்திருப்பார்கள் என்பதில் துளியும் சந்தேகமில்லை.

இந்நிலையில், அண்ணியார் அவர்கள் தோனிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். பொறுங்க.. பொறுங்க… நம்ம சாக்ஷி தோனியைத் தான் அப்படி சொன்னேன். நீங்க வேற எதையும் கற்பனை செய்ய வேண்டாம்.

காதல் கலந்த நெகிழ்ச்சியுடன் அவர் அந்த வாழ்த்தை தெரிவித்துள்ளார். அதில், “உங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்! ஒரு மனிதராக நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை வார்த்தைகளால் கூட நியாயப்படுத்திவிட முடியாது. 10 வருடங்களில் உங்களிடம் இருந்து நான் நிறைய கற்று இருக்கிறேன். கற்றுக் கொண்டே இருக்கிறேன். வாழ்க்கையை யதார்த்தமாகவும், நேர்மையாகவும் அணுக எனக்கு கற்றுக் கொடுத்தமைக்கு நன்றி” என்று சாக்ஷி குறிப்பிட்டுள்ளார். கேப்ஷனில் “அளவுக்கடந்த அன்புடன் எனது வாழ்க்கையை மிகவும் அழகாக்கியதற்கு நன்றி” என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார் சாக்ஷி.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

Web Title:Sakshi dhoni thanks ms dhoni for making life beautiful on his birthday

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X