Advertisment

வாசிம் அக்ரமை வேலைக்காரர் போல நடத்தினாரா சலீம் மாலிக்? பாகிஸ்தான் கிரிக்கெட்டில் திடீர் மோதல்

வாசிம் அக்ரம் தனது புத்தகத்தில் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சலீம் மாலிக், தான் ஜூனியர் என்பதால் தன்னைக் கண்டபடி வேலை வாங்கியதாகவும், ஒரு வேலைக்காரனை போல நடத்தினார் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Saleem Malik Rejects Wasim Akram's 'Treated me Like Servant' Claims Tamil News

wasim Akram’s claim that Saleem Malik acted selfishly and treated him like a servant during his early years of international cricket Tamil News

News about Wasim Akram, Saleem Malik in tamil: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான வாசிம் அக்ரம். இவர் கடந்த 2003 ஆம் ஆண்டு அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றார். சுமார் 18 வருடம் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய இவர் 900 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து ஐபிஎல், பிஎஸ்எல் உள்ளிட்ட தொடர்களில் பயிற்சியாளராகவும், தற்போது அவர் சர்வதேச கிரிக்கெட்டில் வர்ணனையாளராகவும் செயல்பட்டு வருகிறார்.

Advertisment

இந்நிலையில், வாசிம் அக்ரம் அவரது புதிய சுயசரிதையான "சுல்தான்: எ மெமோயர்" என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். அதில் அவர் தனது இளமை கால வாழ்க்கை, போதைப் பழக்கம், பாகிஸ்தான் கிரிக்கெட் மற்றும் ஜாம்பவான் வீரர் இம்ரான் கான் உடனான அனுபவம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை குறிப்பிட்டு எழுதியுள்ளார்.

publive-image

பாகிஸ்தான் கிரிக்கெட்டில் வெடித்த புதிய சர்ச்சை

இந்த நிலையில், வாசிம் அக்ரம் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள சில விஷயங்கள் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் சர்ச்சையையும், சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

வாசிம் அக்ரம் அந்தப் புத்தகத்தில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சலீம் மாலிக் கேப்டனாக இருந்தபோது, தான் ஜூனியர் என்பதால், தன்னைக் கண்டபடி வேலை வாங்கியதாகவும், ஒரு வேலைக்காரனை போல் தன்னை அவர் நடத்தினார் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

publive-image

சலீம் மாலிக்கை தனது புத்தகத்தில் ‘சுயநலவாதி’, ‘எதிர்மறை எண்ணம் உடையவர்’ என்று அழைத்துள்ள வாசிம் அக்ரம், "என்னுடைய ஜூனியர் அந்தஸ்தைப் பயன்படுத்திக் கொள்வார். அவர் எதிர்மறையானவர், சுயநலவாதி மற்றும் என்னை ஒரு வேலைக்காரனைப் போல நடத்தினார். நான் அவருக்கு மசாஜ் செய்ய வேண்டும் என்று அவர் கோரினார், அவர் தனது உடைகள் மற்றும் காலணிகளை சுத்தம் செய்யும்படி எனக்கு கட்டளையிட்டார்.

ரமீஸ், தாஹிர், மொஹ்சின், ஷோயப் முகமது ஆகிய இளம் வீரர்கள் சிலர் என்னை இரவு விடுதிகளுக்கு அழைத்தபோது நான் கோபமடைந்தேன்." என்றும் அவர் குறிப்பிட்டு எழுதியுள்ளார்.

publive-image

இப்படியாக, முன்னாள் கேப்டன் சலீம் மாலிக் குறித்து வாசிம் அக்ரம் எழுதியுள்ளவை பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிருப்தியையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

பதிலடி கொடுத்த சலீம் மாலிக்

இந்த நிலையில், வாசிம் அக்ரமின் குற்றச்சாட்டு குறித்து பேசியுள்ள பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சலீம் மாலிக், அவர் கூறிய அனைத்தையும் நிராகரித்துள்ளார்.

publive-image

இது தொடர்பாக சலீம் மாலிக் 24 செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில், "அவரது கருத்துகள் மற்றும் எந்த அர்த்தத்தில் அவர் அதை எழுதினார் என்பதைப் பற்றிய அவரது பார்வையை நான் அவரிடம் கேட்க விரும்புகிறேன். நாங்கள் பாகிஸ்தான் சுற்றுப்பயணங்களுக்கு சென்றுள்ளோம். அங்கு சலவை இயந்திரங்கள் இருந்தன. நாங்கள் எங்கள் கைகளைப் பயன்படுத்த வேண்டியதில்லை.

நான் அவருடன் பேசாத வரை அல்லது அவருடைய புத்தகத்தை நான் சரிபார்க்காத வரை. நான் அதில் கருத்து சொல்ல விரும்பவில்லை. நாங்கள் சக வீரர்கள் மற்றும் ஒன்றாக நல்ல நேரத்தை செலவிட்டோம். அதனால் நான் எந்த சர்ச்சையையும் உருவாக்க விரும்பவில்லை.

publive-image

நான் சுயநலவாதி என்றால், அவர் எப்படி எனது தலைமையிலான அணியில் தனது முதல் போட்டியில் விளையாடினார்? நான் ஏன் அவரை பந்து வீச அனுமதித்து இருக்க வேண்டும்.

உடைகள் மற்றும் மசாஜ் பற்றி அவர் பேசும் விதம், அவர் தன்னைத்தானே அவமதித்துக் கொள்கிறார். நான் அவருடன் பேசாத வரை, அவர் எந்த அர்த்தத்தில் எழுதினார் என்று எனக்குத் தெரியாது, ”என்று சலீம் மாலிக் கூறியுள்ளார்.

பாகிஸ்தானுக்காக கடந்த 1988 ஆம் ஆண்டில் அறிமுகமான முன்னாள் கேப்டன் சலீம் மாலிக் 103 டெஸ்ட் மற்றும் 293 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 12 ஆயிரம் ரன்களுக்கு மேல் குவித்தவர். இவர் கடந்த 1999 ஆம் ஆண்டில் அனைத்து வடிவ போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெறhttps://t.me/ietamil

Sports Cricket Pakistan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment