Sam Curran becomes most expensive IPL buy as Punjab Kings acquire him for Rs 18.50 crore Tamil News: 16-வது ஐ.பி.எல். டி-20 கிரிக்கெட் போட்டிக்கான மினி ஏலம் கேரள மாநிலம் கொச்சியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஏலத்தில் 10 அணிகளும் தங்களுக்கான வீரர்களை வாங்கி வருகின்றன. இந்நிலையில், இந்த மினி ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலம் போவார் என்று எதிர்பார்க்கப்பட்ட இங்கிலாந்து வீரர் சாம் கரன் ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு வாங்கப்பட்டுள்ளார்.
2021 ஆம் ஆண்டு ஐபிஎல் மினி ஏலத்தில் ரூ.16.25 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் வாங்கப்பட்ட தென்ஆப்பிரிக்கா ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரிஸின் சாதனையை அவர் முறியடித்தார். தற்செயலாக, 2020 சீசனுக்கு முன்னதாக விடுக்கப்படுவதற்கு முன்பு ஐபிஎல் 2019 க்கு முந்தைய ஏலத்தில் பஞ்சாப் கிங்ஸால் ரூ 7.2 கோடிக்கு அவர் எடுக்கப்பட்டார். இறுதியாக ரூ.5.5 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விற்கப்பட்டார்.
இந்த நிலையில், ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு சாம் கரனை ரூ 18.5 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது பஞ்சாப் கிங்ஸ். சமீபத்தில் ஆஸ்திரேலிய மண்ணில் நடைப்பெற்ற டி20 உலகக்கோப்பையில் தொடர் நாயகன் விருதை வென்று இருந்தார் என்பது குறிபிடத்தக்கது.
Tough luck, well played! Go well, Sam! pic.twitter.com/VVBdQQM3a3
— Chennai Super Kings (@ChennaiIPL) December 23, 2022
இந்த மினி ஏலத்தில் ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் கிரீனை, ரூ.17.50 கோடிக்கு மும்பை அணி வாங்கியுள்ளது. இதன் மூலம், ஐபிஎல் வரலாற்றில் 2வது அதிகம் தொகைக்கு ஏலம் போன வீரரானார் கேமரூன் கிரீன். இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக் ஐதராபாத் அணியால் 13.25 கோடிக்கு வாங்கப்பட்டார். இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்சை 16.25 கோடிக்கு சென்னனை அணி வாங்கியுள்ளது.
நிகோலஸ் பூரன் லக்னோ அணியால் 16 கோடிக்கு வாங்கப்பட்டார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.