ஐ.பி.எல்., டி-20 உலக கோப்பை தொடரிலிருந்து விலகுகிறார் சாம் கர்ரன்!
All-Rounder player Sam Curran ruled out of IPL and T20 World Cup Tamil News: சாம் கர்ரன் எஞ்சியுள்ள ஐ.பி.எல். போட்டிகளில் இருந்தும், 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்தும் விலகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
Sam Curran Tamil News: இங்கிலாந்து அணியின் முன்னணி ஆல்ரவுண்டர் வீரராக வலம் வருபவர் சாம் கர்ரன். இவர் தற்போது ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். மேலும், வருகிற அக்டோபர் 17ம் தேதி முதல் நவம்பர் 14 ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தின் ஓமனில் நடைபெற உள்ள 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இடம் பெற்றிருந்தார்.
Advertisment
இந்த நிலையில், சாம் கர்ரன் எஞ்சியுள்ள ஐ.பி.எல். போட்டிகளில் இருந்தும், 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்தும் விலகியுள்ளதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதன் அதிகாரப்பூர்வ வலைதள பக்கமான ட்விட்டரில் பகிர்ந்துள்ள வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.
Kadaikutty Singam to miss out reminder of IPL 2021! 💛🥺
— Chennai Super Kings - Mask P😷du Whistle P🥳du! (@ChennaiIPL) October 5, 2021
சாம் கர்ரன் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து விலகியுள்ள நிலையில், அவருக்கு பதிலாக அவரது சகோதரர் டாம் கர்ரன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
கடந்த அக்டோபர் 2ம் தேதி நடந்த சென்னை- ராஜஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டியில் சாம் கர்ரன் முதுகு பகுதியில் காயம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil