ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் 3 டெஸ்ட் முடிவில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது. இந்நிலையில், இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் (எம்.சி.ஜி) நாளை மறுநாள் வியாழக்கிழமை (டிச.26) பாக்சிங் டே போட்டியாக அதிகாலை 5 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Who is Sam Konstas? Five points to know about Australian debutant ahead of Boxing Day Test
இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற இரு அணிகளும் முழு மூச்சுடன் போராடும் என்பதால் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் 19 வயதான சாம் கான்ஸ்டாஸை களமிறக்குகிறது ஆஸ்திரேலியா.
சாம் கான்ஸ்டாஸ் கான்பெராவில் இந்தியாவுக்கு எதிராக பிரைம் மினிஸ்டர்ஸ் லெவன் அணிக்காக களமாடி தனது சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி இருந்தார். அவர் தொடக்க வீரர் நாதன் மெக்ஸ்வீனிக்கு பதிலாக விளையாடுவார். ஆனால், 19 வயததே நிரம்பிய சாம் கான்ஸ்டாஸை ஆஸ்திரேலியா களமிறக்குவது ஏன்? அவரை மிகவும் சிறப்பானதாக்குவது எது? என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.
தன்னம்பிக்கை
இந்திய வேகப் புயல் ஜஸ்பிரித் பும்ராவின் பந்துவீச்சுக்கு எதிராக ஆஸ்திரேலியாவின் டாப் ஆடர் வீரர்கள் தடுமாறி வரும் நிலையில், அவரை எதிர்கொள்வதைப் பற்றி அதிகம் கவலைப்படாத வீரராக சாம் கான்ஸ்டாஸ் இருக்கிறார். எனவே, அனைவரின் பார்வையும் அவர் மீது தான் இருக்கும். மேலும் இந்தத் தொடரில் ஆஸ்திரேலியாவைத் தொந்தரவு செய்த ஜஸ்பிரித் பும்ராவை எதிர்கொள்ள அவர் எவ்வாறு தயாராகிறார் என்பதை பார்க்க சுவாரசியமாகவும் இருக்கும்.
வியாழக்கிழமை தொடங்கும் போட்டிக்கு முன்னதாக மெல்போர்னில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய கான்ஸ்டாஸ், இந்திய பந்துவீச்சாளர்களுக்காகத் தன்னிடம் சில திட்டங்கள் இருப்பதாகவும், அது அவர்களுக்கு மீண்டும் அழுத்தத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் மிகவும் அமைதியாகக் குறிப்பிட்டார்.
நியூ சவுத் வேல்ஸைச் சேர்ந்த அவரது அணி வீரர் சீன் அபோட் பேசுகையில், "அவர் விளையாட்டை அணுகும் விதம், அவர் யாரை எதிர்க்கிறார் என்பது அவரைத் தொந்தரவு செய்யாது." என்று கூறினார்.
இந்த நம்பிக்கை எங்கிருந்து வருகிறது?
சாம் கான்ஸ்டாஸ் முன்னாள் ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் ஷேன் வாட்சனை தனது ரோல் மாடலாக கொண்டுள்ளார். ஷேன் வாட்சன் நியூ சவுத் வேல்ஸ் கிரிக்கெட் அணியின் ஆலோசகராக இருந்தார், மேலும் சாம் கான்ஸ்டாஸ் 16 வயதிலிருந்தே அவருக்கு பக்கபலமாக இருந்தார். வாட்சன் ஆல்ரவுண்டரின் எளிய செயல்முறை-உந்துதல் மனநிலையைப் பற்றி பேசும் 'தி வின்னர்ஸ் மைண்ட்செட்' என்ற புத்தகத்தையும் வெளியிட்டு இருந்தார். இதனிடையே, கான்ஸ்டாஸ் அறிமுக ஆட்டத்தைப் பார்க்க அவருடைய குடும்பம் மெல்போர்னுக்கு வர உள்ளனர்.
முதல் தர கிரிக்கெட்டில் கான்ஸ்டாஸ்
டெஸ்ட் கிரிக்கெட்டின் மிகப்பெரிய கட்டங்களில் ஒன்றின் அறிமுகமாக, சாம் கான்ஸ்டாஸ் முதல் தர கிரிக்கெட்டில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். அவர் முதல் தர கிரிக்கெட்டில் வெறும் 11 போட்டிகளில் மட்டுமே விளையாடியிருந்தாலும், அவரது பேட்டிங்கை புறக்கணிப்பது கடினம். அவர் 18 முறை மிடில் ஆடரில் களமாடி 718 ரன்கள் எடுத்துள்ளார்.
கான்ஸ்டாஸ் கடந்த மாத தொடக்கத்தில் நான்கு இன்னிங்ஸ்களில் அரை சதத்தை பதிவு செய்ய முடியவில்லை. ஆனால் அவர் 42.23 என்ற சராசரியில் ஸ்கோரை அடித்தார். மேலும், அவர் இரண்டு சதங்கள் மற்றும் மூன்று அரை சதங்களுடன் 152 ரன்களை குவித்துள்ளார்.
இளம் அறிமுக வீரர்
19 வயது 85 நாட்கள் ஆகும் கான்ஸ்டாஸ் ஆஸ்திரேலிய அணிக்காக அறிமுகம் செய்யும் போது, நான்காவது இளம் ஆஸ்திரேலிய வீரர் என்கிற பெருமையைப் பெறுவார். இந்தப் பட்டியலில் இயன் கிரெய்க் (17 ஆண்டுகள் மற்றும் 239), கேப்டன் பேட் கம்மின்ஸ் (18 ஆண்டுகள் 193 நாட்கள்) மற்றும் டாம் காரெட் (18 ஆண்டுகள் மற்றும் 232 நாட்கள்) ஆகியோர் முதல் மூன்று இடங்களில் உள்ளன.
முக்கியமான தருணம் எது?
சாம் கான்ஸ்டாஸ் ஆஸ்திரேலிய கிரிக்கெட் சூழ்நிலைக்கு வந்திருந்தார், அவர் சர்வதேச அணியில் நுழைவார் என்று யாரும் நினைக்கவில்லை. பின்னர் அக்டோபர் 11 அன்று, சாம் கான்ஸ்டாஸ் ஷெஃபீல்ட் ஷீல்டில் இரட்டை சதங்களை விளாசினார். மேலும் அந்த சாதனையை எட்டிய மூன்றாவது இளைய வீரர் ஆனார். பின்னர் அவர் ரன்கள் அதிகம் எடுக்கவில்லை. ஆனால், இந்தியாவிற்கு எதிராக பிரைம் மினிஸ்டர்ஸ் லெவன் அணிக்காக விளையாடும் போது விரைவில் கம் பேக் கொடுத்தார். அவர் 97 பந்தில் 107 ரன்களை அபாரமாக அடித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.