Advertisment

ரிங்குவைப் போன்ற ஃபினிஷர்... ரூ 8.40 கோடிக்கு சி.எஸ்.கே வசப்படுத்திய சமீர் ரிஸ்வியின் கதை!

ஒரே இரவில் கோடீஸ்வரர் ஆன கதைகளில் வரும் கதாநாயகன் போல் சமீர் ரிஸ்வி ஆனார். ஆனால், அவரது கிரிக்கெட் பயணம் கரடுமுரடான தடைகள் நிரப்பிய பாதையில் தொடங்கியது.

author-image
WebDesk
New Update
Sameer Rizvi CSK  IPL auction story in tamil

ஐ.பி.எல். 2024 ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் இளம் வீரரான சமீர் ரிஸ்வியை ரூ. 8.40 கோடிக்கு ஏலத்தில் வசப்படுத்தியது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

 IPL 2024 auction | Chennai Super Kings: 17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2024) நடைபெறுகிறது. இதையொட்டி வீரர்களின் மினி ஏலம் நேற்று (செவ்வாய்க்கிழமை) துபாயில் நடைபெற்றது. மிகவும் பரபரப்பாக அரங்கேறிய இந்த ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் இளம் வீரரான  சமீர் ரிஸ்வியை ரூ. 8.40 கோடிக்கு ஏலத்தில் வசப்படுத்தியது. 

Advertisment

ஆங்கிலத்தில் படிக்கவும்: Sameer Rizvi’s IPL auction story

ஒரே இரவில் கோடீஸ்வரர் ஆன கதைகளில் வரும் கதாநாயகன் போல் சமீர் ரிஸ்வி ஆனார். ஆனால், அவரது கிரிக்கெட் பயணம் கரடுமுரடான தடைகள் நிரம்பிய பாதையில் தொடங்கியது. 

சமீர் ரிஸ்வியின் தந்தை ஹசீன் ரிஸ்வி தனது மைத்துனர் தன்கீப் அக்தரை அவர்களது வீட்டிற்குள் நுழையவே கூடாது என கட்டுப்பாடு விதித்தார். அதற்கு காரணம், தன்கீப் அக்தர் ஒரு தோல்வியுற்ற கிரிக்கெட் வீரராக அறியப்பட்டார். அவர் தனது மருமகன் சமீர் ரிஸ்வியின் திறனைக் கண்டு, அவர் இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்றும் விரும்பினார். அவரையும்  தோல்வியுற்ற கிரிக்கெட் வீரனாக தன்கீப் அக்தர் மாற்றி விடுவரோ என்கிற அச்சம் தந்தை ஹசீன் ரிஸ்வியிடம் இருந்தது. 

நேற்று செவ்வாயன்று நடந்த ஏலத்தில் சமீர் ரிஸ்வியின் மாமு தன்கீப் அக்தரின் கனவுக்கு ஒரு படி அருகில் வந்தார். மீரட்டில் வசிக்கும் சமீர் ரிஸ்வியை ரூ. 8.40 கோடிக்கு ஏலத்தில் சென்னை அணி வசப்படுத்தியது. அன்றைய நாளில் அதிக வருமானம் ஈட்டிய இளம் வீரர் ஆனார் சமீர் ரிஸ்வி. 

“மாமு எப்போதும் என்னுடன் இருந்தார். கடந்த 14 ஆண்டுகளில் அவர் என்னுடன் மைதானத்தில் இல்லாதது 14 நாட்கள் மட்டுமே இருக்கும் என்று நான் நினைக்கிறேன். 

என்னை விட என் மீது அவர் தான் அதிக நம்பிக்கை வைத்திருந்தார். ஏலத்தை உட்கார்ந்து பார்க்கும்படி என்னை வற்புறுத்தினார். நான் ஒருபோதும் அதைப் பார்க்க விரும்பவில்லை, ஆனால் அவர் என்னைப் பார்க்க வைத்தார், அவர் அதைப் பார்த்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். ”என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழுக்கு அளித்த பேட்டியில் சமீர் ரிஸ்வி கூறுகிறார்.

பல ஆண்டுகளாக, தங்கீப் தனது மைத்துனரின் உத்தரவு காரணமாக தனது சகோதரியின் வீட்டிற்கு செல்வதை நிறுத்தினார். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு 16 வயதான சமீர் ரஞ்சி கோப்பையில் அறிமுகமானபோது அவர் தனது மைத்துனரை சந்தித்தார்.

"அவனைக் கெடுக்காதே. அவனை உன்னைப் போல் ஆக்காதே. கிரிக்கெட் விளையாடி நீ என்ன சம்பாதித்தாய்? என எனது மைத்துனர் என்னைப் பார்க்கும் போதெல்லாம் என்னிடம் சொல்லும் வார்த்தைகள் இவை, ”என்று சிரிக்கிறார் தங்கீப் அக்தர். 

அப்போது, ​​அது என்னை மிகவும் காயப்படுத்தியது. இன்று, இதனைப் பற்றி எல்லோரும் பேசுகையில் நாங்கள் நிறைய சிரித்தோம். சமீரின் தந்தைக்கு கடந்த மூன்று வருடங்களாக உடல்நிலை சரியில்லை. சமீர் தனது ரஞ்சியில் அறிமுகமான சில நாட்களுக்கு முன்பு அவருக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டது.

இன்று என் மைத்துனர் என் கையைப் பிடித்து ஒரு குழந்தையைப் போல அழுதார். இது எங்கள் குடும்பத்திற்கு மிகவும் உணர்ச்சிகரமான தருணம்” என்று கூறுகிறார். 

சமீர் ரிஸ்வி தற்போது அதிக தொகைக்கு சென்னை அணியால் வாங்கப்பட்டு இருபப்து இப்போது இன்னும் கூடுதலான பொறுப்பை தனது தோள்களில் சுமத்தியுள்ளதாக தங்கீப் அக்தர் கூறினார். 

“இந்த வயசுல இவ்வளவு பணம், எனக்கு கொஞ்சம் பயமா இருக்கு. பயிற்சியாளராக எனது பணி முடிந்துவிட்டது. இப்போது அவர் உத்தரபிரதேசம், தேசிய கிரிக்கெட் அகாடமி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகியவற்றில் அதிக தகுதி வாய்ந்த பயிற்சியாளர்களைப் பெறுவார். அவர் கால்களை தரையில் வைப்பதே என் வேலை. இது ஒரு கடினமான பணியாக இருக்கும்,” என்று கூறி சிரிக்கிறார். 

இந்தியாவின் முன்னாள் இடது கை சுழற்பந்து வீச்சாளர் சுனில் ஜோஷி 2019-20ல் 16வது வயதான சமீர் ரிஸ்வியை முதல்தரப் போட்டியில் அறிமுகம் செய்து வைத்தார். அப்போது தான் அவர் வெளிச்சத்திற்கு வந்தார்.

"சமீரின் விளையாட்டின் சிறந்த அம்சங்களில் ஒன்று, 4 மற்றும் 7 வது இடத்திற்கு இடையில் எங்கும் பேட் செய்யும் திறன் ஆகும். அவர் எந்த இடத்திலும் பேட்டிங் செய்யத் தயாராக இருக்கிறார், மேலும் அவர் வெவ்வேறு ரோல்களுக்கு ஏற்ப விளையாடுகிறார். ரிங்கு சிங்-குவைப் போலவே  ஆட்டங்களை முடிக்கும் சிறந்த ஃபினிஷர் திறனையும் அவர் பெற்றுள்ளார். 

"அவரிடம் அந்தத் திறமை எப்போதும் இருந்தது. அவர் தனது ரஞ்சி டிராபியில் அறிமுகமானபோது, ​​​​அவர் இளமையாக இருக்கிறார். ஆனால் என்னை நம்புங்கள், அவர் தயாராக இருக்கிறார் என்று மக்கள் சொன்னார்கள். அதன்பிறகு, அவர் தனது ஆட்டத்தை மேம்படுத்தியது மட்டுமல்லாமல் அதை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றார். இந்த உயர்வு அதிர்ச்சியளிக்கிறது ஆனால் எனக்கு ஆச்சரியம் இல்லை,” என்கிறார் இப்போது உத்தரபிரதேசத்தின் பயிற்சியாளராக இருக்கும் சுனில் ஜோஷி.

சமீர் அவர் விளையாடி அணிக்கு பெரிய வெற்றிகளை தேடித் தந்ததில் பெயர் போனவர். சையத் முஷ்டாக் அலி டி20 டிராபியில், 139.89 ஸ்ட்ரைக் ரேட்டில் 18 அதிகபட்ச சிக்ஸர்களுடன் அதிக சிக்சர் அடித்த முதல் 10 வீரர்களில் ஒருவராக இருந்தார். 20 வயதான அவர் ஒவ்வொரு 11 பந்துகளுக்கும் ஒரு சிக்சர் அடித்தார். 

உத்தரபிரதேச டி20 லீக்கில், சமீர் அதிகபட்ச தனிநபர் ஸ்கோரான 122 ரன்களை குவித்தார். அத்துடன் 47 பந்துகளில் அதிவேக சதத்தையும் பதிவு செய்தார். குறைந்தபட்சம் 100 ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன்களில், அவர் போட்டியில் சிறந்த ஸ்ட்ரைக் ரேட்டை 188.80 ஆகக் கொண்டிருந்தார். ஒட்டுமொத்தமாக சிக்ஸர் அடித்தவர்களில் முதன்மையானவராகவும் அவர் இருந்தார். 

உத்தரபிரதேச டி20 லீக்கில் சமீர் 35 சிக்ஸர்களுடன் 455 ரன்களை குவித்து இருந்தார். ஆண்கள் U-23 மாநில ஏ டிராபியில், அவர்  37 சிக்ஸர்களை பறக்கவிட்டு 454 ரன்கள் எடுத்தார்,அடித்தார். மேலும், தனது அணியை சாம்பியன் பட்டம் வெல்ல அழைத்துச் சென்றார்.

“ரோகித் சர்மா அவருடைய முன்மாதிரி. சிரமமின்றி ஆடும் ரோகித்தின் பேட்டிங் அவரை அவரது ரசிகனாக்கியது. அவர் அவ்வப்போது அவரது புல் ஷாட் ரோகித் போல் இருக்கிறதா இல்லையா என்று கேள்விகளைக் கேட்டு என்னை எரிச்சலூட்டுவது வழக்கம். எந்த ஒற்றுமையும் இல்லை, ஆனால் அவர் ரோகித்தைப் போல பேட் செய்கிறார் என்று அவர் நினைக்கிறார். 

அவர் சிஎஸ்கேக்கு போவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. காரணம் எம்.எஸ்.தோனியிடம் மூன்று மாதங்கள் இருந்தாலே, அவர் நிறைய கற்றுக் கொண்டு சிறந்த கிரிக்கெட் வீரராக மாறுவார்” என்கிறார் தங்கீப் அக்தர். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Chennai Super Kings IPL 2024 Auction
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment