/indian-express-tamil/media/media_files/duQGQH8s8T6egX0cKsvj.jpg)
டி20 உலகக்கோப்பைக்கான நேபாள் அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தாலும், மே 25 வரை அணியில் மாற்றம் செய்யலாம் என்பதால் சந்தீப் இடம்பெற வாய்ப்பு.
Nepal: நேபாள கிரிக்கெட் அணியை கேப்டனாக வழிநடத்தியவர் சந்தீப் லமிச்சேன். இதுவரை 30 சர்வதேச ஒரு நாள் மற்றும் 44 டி-20 போட்டிகளில் விளையாடியுள்ள இவர், ஐ.பி.எல். தொடரில் பங்கேற்ற முதல் நேபாள வீரர் என்ற பெருமையும் பெற்றார். கடைசியாக ஜமைக்கா தாளாவாஸ் அணிக்காக கரீபியன் பிரிமியர் லீக் தொடரில் சந்தீப் விளையாடினார்.
இந்நிலையில், சந்தீப் லமிச்சேன் மீது 17 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை புகார் அளித்து இருந்தார். அந்த புகாரில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 21-ந்தேதி காத்மாண்டு ஓட்டல் ஒன்றில் சந்தீப் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறியிருந்தார். இது தொடர்பாக சந்தீப் லமிச்சேன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது.
இந்த வழக்கில் சந்தீப் லமிச்சேனுக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து காத்மாண்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் நேபாள கிரிக்கெட் வாரியம் சந்தீப் லமிச்சேனை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது. நீதிமன்றம் விதித்த சிறை தண்டனையை எதிர்த்து சந்தீப் லமிச்சேன் மேல்முறையீடு செய்தார்.
இந்நிலையில், இந்த மனு மீதான விசாரணை பதான் உச்சநீதிமன்றத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெற்றது. இந்த விசாரணையில் அவர் குற்றமற்றவர் என்று தீர்ப்பளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார். மேலும் அவருக்கு வழங்கப்பட்ட 8 ஆண்டுகள் சிறைதண்டனையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், டி20 உலகக்கோப்பைக்கான நேபாள் அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தாலும், மே 25 வரை அணியில் மாற்றம் செய்யலாம் என்பதால் சந்தீப் இடம்பெற வாய்ப்பு என தகவல் வெளியாகியுள்ளது.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us