Advertisment

பாக்., நடிகையுடன் சோயப் மாலிக் திருமணம்: அறிக்கை வெளியிட்ட சானியா மிர்சா குடும்பத்தினர்

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான சோயிப் மாலிக் பாகிஸ்தான் நடிகை சனா ஜாவேத்தை திருமணம் செய்துள்ள நிலையில், சானியா மிர்சா குடும்பத்தினர் தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Sania Mirza and Shoaib Malik divorce father Imran Mirza Tamil News

சோயிப் மாலிக் பாகிஸ்தான் நடிகை சனா ஜாவித்தை கடந்த 20ம் தேதி திருமணம் செய்தார்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Sania Mirza | Shoaib Malik: இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனையாக திகழ்ந்தவர் சானியா மிர்சா. டென்னிஸ் உலகில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ள இவர் 6 முறை கிராண்ட் ஸ்லாம் இரட்டையர் பட்டத்தை வென்றுள்ளார். இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு 5 மாதங்கள் காதலித்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சோயப் மாலிக்கை திருமணம் செய்து கொண்டார்.

Advertisment

எல்லை தாண்டிய இந்த காதல் தம்பதிக்கு இஷான் மிர்சா மாலிக் என்ற மகன் இருக்கிறார். பல்வேறு நட்சத்திர ஜோடிகளைப் போல் இந்த ஜோடியும் விவாகரத்து செய்துகொள்ளபோவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. இதனிடையே, சோயிப் மாலிக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து தன் மனைவி சானியா மிர்சா தொடர்பான பதிவுகளை நீக்கினார். 

மேலும், கடந்த ஆண்டு நடிகை சனா ஜாவித் பிறந்தநாளன்று சோயிப் மாலிக் வாழ்த்து தெரிவித்திருந்தார். அதோடு சனாவுடன் இருக்கும் புகைப்படத்தையும் சோயிப் மாலிக் தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டார். அப்போது இருந்தே சானியா மிர்சாவை சோயிப் மாலிக் விவாகரத்து செய்துவிட்டு சனாவை திருமணம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்த சூழலில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சானியா மிர்சா தனது இஸ்டாகிராம் பக்கத்தில், விவாகரத்து தொடர்பாக பதிவு சூசகமான ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், திருமணம் கடினமானது. விவாகரத்து கடினமானது. இதில் உங்களுக்கான கடினமானதை தேர்வு செய்யுங்கள். உடல் பருமனாக இருப்பது கடினமானது. உடலை சரியாக வைத்திருப்பது கடினமானது. இதில் உங்களுக்கான கடினமானதை தேர்வு செய்யுங்கள்' என்று தெரிவித்தார். 

திருமணம் 

இந்நிலையில், சோயிப் மாலிக் பாகிஸ்தான் நடிகை சனா ஜாவித்தை கடந்த 20ம் தேதி திருமணம் செய்தார். மாலிக்கும் சனாவும் தங்களது சமூக வலைதள பக்கங்களில் தாங்கள் திருமணம் செய்துகொண்ட திருமண புகைப்படத்தை வெளியிட்டனர். இதன் மூலம் சானியா மிர்சாவை சோயிப் மாலிக் விவாகரத்து செய்துவிட்டார் என்பது உறுதியாகியது. இதனிடையே, கணவனை தன்னிச்சையாக விவாரத்து செய்யும் குலா என்ற இஸ்லாமிய முறைப்படி சோயிப் மாலிக்கை சானியா மிர்சா விவாகரத்து செய்துள்ளதாக சானியாவின் தந்தை தெரிவித்து இருந்தார். 

அறிக்கை 

இந்நிலையில், சோயிப் மாலிக் - சனா ஜாவித் திருமணம் முடிந்த மறுநாள் சானியா மிர்சா குடும்பத்தினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில், “சானியா எப்போதும் தனது தனிப்பட்ட வாழ்க்கையை பொதுப்பார்வையில் இருந்து விலக்கியே வைத்திருந்துள்ளார். சோயிப் மாலிக்கும் சானியா மிர்சாவும் விவாகரத்து செய்திருப்பதை பகிர்ந்து கொள்ளவேண்டிய அவசியம் தற்போது எழுந்துள்ளது. 

சோயிப்பின் புதிய பயணத்திற்கு சானியா வாழ்த்து தெரிவிக்கிறார். சானியாவின் இந்த முக்கியமான காலக்கட்டத்தில் அவரது நலம் விரும்பிகளும் அவரது ரசிகர்களும் எந்த விதமான யூகங்களிலும் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டுமெனவும், அவரது தனியுரிமைக்கான தேவையை மதிக்கவும் கேட்டுக்கொள்கிறோம்” என தெரிவித்துள்ளனர்.

சோயிப் மாலிக் திருமணம் செய்துள்ள பாகிஸ்தான் நடிகை சனா ஜாவேத் முன்பு பாடகர் உமர் ஜஸ்வாலை மணந்தார். இருவரும் 2020 இல் திருமணம் செய்து கொண்டு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பிரிந்தனர். இதேபோல், ஆயிஷா, சானியா மிர்சா ஆகியோரை திருமணம் செய்து விவாகரத்து பெற்ற சோயிப் மாலிக் தற்போது  நடிகை சனா ஜாவித்தை 3வதாக திருமணம் செய்துள்ளார்.

பாகிஸ்தான் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியில் ஓய்வை அறிவித்த சோயிப் மாலிக், உலகம் முழுவதும் டி20 கிரிக்கெட்டை விளையாடி வருகிறார். இந்த ஃபார்மெட்டில் இருந்து மட்டும் அவர் பாகிஸ்தான் அணியில் இருந்து இன்னும் ஓய்வை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

Sania Mirza Shoaib Malik
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment