இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக் இருவரும் விவாகரத்து செய்து கொண்டதாக கூறப்படும் ஊகங்களுக்கு மத்தியில், ஒரு ரியாலிட்டி ஷோவை தொகுத்து வழங்க உள்ளனர்.
Advertisment
சனிக்கிழமையன்று (நவ.12), OTT தளமான Urduflix, அவர்களின் இன்ஸ்டாகிராம் கணக்கில், 'தி மிர்சா மாலிக் டாக் ஷோ' என்று அறிவித்துள்ளது. இந்தப் போஸ்டரில் சானியா மற்றும் சோயிப் இருவரும் இடம்பெற்றுள்ளனர்.
சானியா மிர்சா, சோயிப்மாலிக் ஷோ மிக விரைவில் உருது ஃப்ளிக்ஸில் மட்டுமே” என்ற தலைப்பில் எழுதப்பட்டிருந்தது. இந்த அறிவிப்புக்குப் பிறகு ரசிகர்கள் குழப்பமடைந்தனர். மேலும் இதுதொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பினர். “அப்படியானால் விவாகரத்து என்பது விளம்பர நோக்கங்களுக்காகவா?” என்று ரசிகர் ஒருவர் எழுதியபோது, மற்றொரு ரசிகர், “பப்ளிசிட்டி ஸ்டண்ட் தான்” என்றார்.
மேலும் சிலர் சானியா மிர்சா, சோயிப் தம்பதியர் பிரியவில்லை என மகிழ்ச்சி தெரிவித்து வாழ்த்தியுள்ளனர். சமீபத்தில்,சானியா, மாலிக் ஜோடி குறித்து இணையத்தில் பல்வேறு தகவல்கள் வெளிவந்தன, அதில் இந்த ஜோடி விவாகரத்து செய்யப் போவதாகக் கூறப்பட்டது.
இதற்கிடையில் இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் மாடல் நடிகை ஆயிஷா ஓமர் பெயரும் இழுக்கப்பட்டது. முன்னதாக சோயிப் மாலிக்கும், ஆயிஷாவும் சேர்ந்து போட்டோஷூட் ஒன்றை நடத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil