Mohammed Shami | Sania Mirza: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக இருந்து வருபவர் முகமது ஷமி. இவர் ஹசின் ஜஹான் என்பவரை கடந்த 2002 ஆம் ஆண்டு திருமணம் செய்து, கடந்த 2014 விவாகரத்து செய்தார். தற்போது இருவரும் தனியாக வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா மற்றும் முகமது ஷமி இருவரும் திருமணம் செய்துகொள்ளப் போவதாக தகவல்கள் வெளியாகின.
இந்திய டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா கடந்த பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சோயப் மாலிக்கை காதலித்து கடந்த 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஆனால், இருவருக்குள்ளும் ஏற்பட்ட மனக் கசப்பு காரணமாக இந்த ஆண்டு தொடக்கத்தில் விவாகரத்து செய்வதாக சானியா மிர்சா அறிவித்தார்.
இந்த சூழலில் தான், சானியா மிர்சா மற்றும் முகமது ஷமி ஆகிய இருவரும் திருமணம் செய்துகொள்ளப் போவதாக செய்திகள் வெளிவந்தன. அவர்கள் திருமணம் செய்து கொண்டது போன்ற புகைப்படங்களும் வைரலாக்கப்பட்டன. இதையடுத்து, ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த நிலையில், சானியா மிர்சா மற்றும் முகமது ஷமி ஆகிய இருவரும் திருமணம் செய்து கொண்டதாக வெளிவரும் செய்திகள் முற்றிலும் வதந்தி என்று சானியா மிர்சாவின் தந்தை இம்ரான் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசுகையில், "இது முற்றிலும் வதந்தி. இதுவரை முகமது ஷமியை சானியா மிர்சா சந்தித்ததுகூட கிடையாது" என்று தெரிவித்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“