Sports - cricket Tamil News: 13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் அக்டோபர் 5 ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. நவம்பர் 19 ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த தொடரில் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உள்பட 10 அணிகள் பங்கேற்க உள்ளன.
இந்நிலையில், உலகக்கோப்பை தொடருக்கான 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ரோகித் சர்மா தலைமையிலான ஆசிய கோப்பை அணியில் இடம் பெற்றிருந்த வீரர்களில் இருந்து திலக் வர்மா, சஞ்சு சாம்சன், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் நீக்கப்பட்டு மீதமுள்ள 15 வீரர்கள் உலகக்கோப்பைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
உலகக் கோப்பை இந்திய அணி தேர்வு குறித்து கலவையான விமர்சனங்களை பலரும் முன்வைத்து வருகிறார்கள். அதில், முதன்மையனாக சஞ்சு சாம்சன் மற்றும் ஆஃப் ஸ்பின்னர் அஸ்வின் ஆகியோர் ஏன் அணியில் இடம் பெறவில்லை? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். விக்கெட் கீப்பர் வீரரான கே.எல் ராகுல் உடற்தகுதி இன்னும் கேள்விக்குள்ளாகி வரும் நிலையில், அவரது இடத்தில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு அளித்திருக்கப்பட வேண்டும் என்றும், அணியில் ஒரு ஆஃப் ஸ்பின்னர் கூட இல்லை. மூத்த வீரரான அஸ்வினை ஆஃப் ஸ்பின்னராக எடுத்திருக்கலாம் என்றும் யோசனை கூறி வருகிறார்கள். /indian-express-tamil/media/post_attachments/a5ddba05-75d.png)
இந்த நிலையில், சஞ்சு சாம்சன், ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் பிரசித் கிருஷ்ணா போன்ற வீரர்கள் இன்னும் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பிடிக்க வாய்ப்புள்ளது. பி.சி.சி.ஐ தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகர்கர் உலகக் கோப்பைக்கான அணியை நேற்று அறிவித்தாலும், அதனை உறுதி செய்யும் கடைசி நாள் செப்டம்பர் 27ம் தேதி ஆகும். அந்தத் தேதிக்குள் இந்தியா அதன் அணியை மாற்றி அமைக்கலாம். எனவே, இந்த 3 வீரர்களும் இந்திய அணியில் மீண்டும் இடம் பெற வாய்ப்புகள் உள்ளன.
சஞ்சு சாம்சன் இன்னும் அணியில் இடம்பிடிக்க, அணியில் உள்ள எதாவது ஒரு பேட்ஸ்மேனுக்கு காயம் ஏற்பட்டால் மாற்று வீரராக பரிசீலிக்கப்படுவார். உலகக் கோப்பைக்கு முன் இறுதித் தயாரிப்பாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா விளையாட உள்ளது. மேலும் சஞ்சு சாம்சன் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளும் அணியில் இருக்க வாய்ப்பில்லை என்றாலும், தொடரில் விளையாடும் வீரர்களில் ஒருவருக்கு காயம் ஏதும் ஏற்பட்டால் அவர் உலகக் கோப்பை அணியில் இடம் பிடிக்க வாய்ப்புள்ளது. /indian-express-tamil/media/post_attachments/139dd056-032.jpg)
சஞ்சு சாம்சன், பிரசித் கிருஷ்ணா மற்றும் ரவிச்சந்திரன் அஷ்வின் மற்றும் திலக் வர்மா ஆகியோர் ரிசர்வ் வீரர்களாக இருப்பார்கள். இருப்பினும் பி.சி.சி.ஐ இன்னும் யாரையும் பெயரிடவில்லை. இந்தியா போட்டியை நடத்தும் நாடு என்பதால், அவர்கள் தங்களின் ரிசர்வ் வீரர்களின் பெயரை வெளியிட வேண்டிய அவசியமில்லை.
இந்த 3 வீரர்களைப் பொறுத்தவரை, பாதை கடினமானது. ஆனால் சாத்தியமற்றது அல்ல. அக்சர் படேல் மற்றும் குல்தீப் யாதவ் இருவருக்கும் ஏதேனும் காயம் ஏற்பட்டால் ரவிச்சந்திரன் அஸ்வின் மாற்று வீரராக இடம் பிடிப்பார். இதேபோல், வேகப்பந்து வீச்சு பிரிவில் பிரசித் கிருஷ்ணாவுக்கு வாய்ப்பு வழங்கலாம். ஆனால் ஷர்துல் தாக்கூரின் சிறந்த பேட்டிங் திறன் அவருக்கு உதவியுள்ளது. திலக் வர்மா இன்னும் ஒருநாள் போட்டியில் அறிமுகமாகவில்லை. இடது கை ஆட்டக்காரர் என்பதால், அவர் பட்டியலில் அடுத்த இடத்தில் உள்ளார்.
2023 உலகக் கோப்பைக்கான இந்திய அணி
பேட்டர்கள்: ரோகித் சர்மா, சுப்மான் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ்
விக்கெட் கீப்பர்கள்: இஷான் கிஷன், கேஎல் ராகுல்
வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர்கள்: ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), ஷர்துல் தாக்கூர்
சுழல் ஆல்ரவுண்டர்கள்: ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல்,
வேகப்பந்து வீச்சளர்கள்: ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ்
சுழற்பந்து வீச்சாளர்: குல்தீப் யாதவ்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“