இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 ஐதராபாத்தில் இன்று சனிக்கிழமை இரவு 7 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி 133 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-0 என்கிற கணக்கில் கைப்பற்றியது.
இந்நிலையில், இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தியது. இந்திய அணி தரப்பில் தொடக்க வீரராக களமாடிய சஞ்சு சாம்சன் ஐதராபாத்தில் சிக்ஸர் மழை பொழிந்தார். வந்தேச அணியின் பந்துவீச்சை நொறுக்கி அள்ளிய அவர் 40-வது பந்தில் பவுண்டரியை விரட்டி தனது முதல் சர்வதேச டி20 சதத்தை விளாசி மிரட்டினார். அவரது அதிரடி ஆட்டத்தை கட்டுப்படுத்த வந்தேச பவுலர்கள் திணறினர். குறிப்பாக, சஞ்சு ரிஷாத் ஹொசைன் வீசிய 10-வது ஓவரில் முதல் பந்தை தவிர்த்து, அடுத்த 5 பந்துகளில் வரிசையாக சிக்ஸர்களை பறக்க விட்டு மிரட்டினார்.
மொத்தமாக 47 பந்துகளில் 11 பவுண்டரிகள், 8 சிக்ஸர்களை பறக்கவிட்டு 111 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவரது அதிரடியான ஆட்டத்தின் மூலம் இந்தியாவின் ஸ்கோர் விறுவிறுவென எகிறியது. சஞ்சு 40 பந்துகளில் சதம் அடித்து மிரட்டியதன் மூலம் டி20 போட்டியில் அதிவேகமாக சதம் அடித்த இரண்டாது இந்திய வீரரானார் சஞ்சு சாம்சன். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகிறார்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“