பாகிஸ்தான், இலங்கையில் நடைபெற உள்ள ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியை நேற்று தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் அறிவித்தார். வருகிற 30ம் தேதி முதல் தொடங்கும் இந்த தொடருக்காக 17 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் பேக்-அப் வீரராக சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
"ஸ்ரேயாஸ் நல்ல உடற்தகுதியுடன் உள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கே.எல். ராகுலுக்கு சிறிய காயம் உள்ளது. அதனால் தான் சஞ்சு அணியில் பேக்-அப் வீரராக இருக்கிறார்,” என்று அஜித் அகர்கர் கூறினார்.
இந்திய அணியில் மிடில் ஆடரில் விளையாடி வரும் கே.எல். ராகுலுக்கு காயம் ஏற்பட்டது. அதனால் அவரது இடத்தில் சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன் மற்றும் திலக் வர்மா போன்ற வீரர்களை இந்திய அணி நிர்வாகம் முயற்சி செய்தது. இதில், திலக் வர்மா - சூர்யகுமார் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆனால், சஞ்சு பேக்-அப் வீரராக மட்டுமே தேர்வு செய்யப்பட்டள்ளார். இதனால், அவரது உலகக் கோப்பை கனவு கானால் நீராகி விடும் என்கிற ஐயம் எழுகிறது.
28 வயதான சஞ்சு ஒருநாள் போட்டிகளில் சராசரி 55-க்கு மேல் வைத்திருக்கும் சஞ்சு தனக்கு கிடைக்கும் நல்ல வாய்ப்புகளை தவற விடுகிறார். பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் ஆட்டத்தை விளையாடாமல் போகிறார். அவரது கடைசி ஒருநாள் போட்டியில் கூட, அவர் 40 பந்துகளில் 51 ரன்கள் எடுத்தார். அதற்குள் அவரது ஆக்ரோஷத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.
கடந்த ஞாயிற்றுக்கிழமை வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கடைசி டி-20 யில் சஞ்சு சாம்சனுக்கு மாற்றத்தை ஏற்படுத்த மற்றொரு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், அவர் ஆரம்பம் முதலே போராடினார், அவரது இயல்பான உள்ளுணர்வைப் போலல்லாமல், ரன் சேர்க்க தடுமாறினார். பெரிய ஸ்கோரை எட்டியபோது, அவர் தனது சொந்த காசில் சூனியம் வைத்துக்கொண்டார். கவர் திசையில் பெஞ்சமின் வைட் பக்கம் பந்தை விரட்ட முயற்சித்து, இன்சைடு எட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். சஞ்சுவுக்கு கடைசி வரை பேட்டிங் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், 10.2வது ஓவரில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இருப்பினும், சஞ்சு சாம்சன் அயர்லாந்து தொடருக்குப் பிறகு என்.சி.ஏ-வில் ஆசிய கோப்பை முகாமில் பங்கேற்பார். ரிசர்வ் கீப்பராகவும் இலங்கை செல்லவுள்ளார். கே.எல்.ராகுல் இன்னும் 100% உடதகுதியை எட்டாத நிலையில், இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் ஆசிய கோப்பை ஆடும் லெவனில் சஞ்சுவை சேர்க்குமா? அல்லது வேறு திட்டத்துடன் செல்லுமா? என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.
ஆசிய கோப்பைக்கான இந்திய அணி:
ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், திலக் வர்மா, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, பிரசித் கிருஷ்ணா, சஞ்சு சாம்சன் (பேக்-அப் வீரர்).
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil