scorecardresearch

செமையான அந்த டைவ்: கடைசி நிமிட ஆட்டத்தை இந்தியா பக்கம் திருப்பிய சஞ்சு சாம்சன்

Sanju Samson redeemed himself with a diving save while keeping wickets in the final over of the game against West Indies Tamil News: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணியின் வெற்றிக்கு திருப்பு முனையை ஏற்படுத்தியவராக விக்கெட் கீப்பர் வீரர் சஞ்சு சாம்சன் இருந்தார்.

Sanju Samson Saves a Crucial Boundary, Helps India With A 3-Run Win Over
Sanju Samson. Image Credits: Twitter

West Indies vs India, 1st ODI; Sanju Samson Tamil News: வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி தற்போது 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் இந்திய நேரப்படி நேற்று இரவு 7 மணிக்கு தொடங்கிய முதலாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இண்டீஸ் அணி இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைப்பு விடுத்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 308 ரன்கள் எடுத்தது.

இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக கேப்டன் தவான் 97 ரன்களும் (99 பந்துகள், 10 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள்) தொடக்க வீரர் சுப்மன் கில் 64 ரன்களும் (53 பந்துகள், 6 பவுண்டரிகள் 2 சிக்ஸர்கள்), ஷ்ரேயாஸ் ஐயர் 54 ரன்களும் (57 பந்துகள், 5 பவுண்டரிகள் 2 சிக்ஸர்கள்) எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் அதிகபட்சமாக அல்சாரி ஜோசப் மற்றும் மோட்டி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

தொடர்ந்து 309 ரன்கள் வெற்றி இலக்கை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அந்த அணியின் தொடக்க வீரர் கைல் மேயர்ஸ் 75 ரன்களும், பிராண்டன் கிங் 54 ரன்களும் எடுத்தனர். எனினும், சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்த அந்த அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 305 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பெற்றது.

இந்த அசத்தலான வெற்றியின் மூலம் இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்திய அணியில் மிகச்சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய முகமது சிராஜ், ஷர்துல் தாக்கூர் மற்றும் சாஹல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர்.

செமையான டைவ்… ஆட்டத்தில் திருப்பு முனையை ஏற்படுத்திய சஞ்சு…

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் சஞ்சு சாம்சன் விக்கெட் கீப்பராக இந்திய அணியில் இணைத்துள்ள நிலையில், அவர் நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணியின் வெற்றிக்கு திருப்பு முனையை ஏற்படுத்தியவராக இருந்தார். பேட்டிங்கில் 1 சிக்ஸர் பறக்க விட்டு 12 ரன்கள் எடுத்த அவர் அணியின் வெற்றியை உறுதிய செய்ய மிகச்சிறப்பான விக்கெட் கீப்பிங் செய்தார்.

குறிப்பாக, வெஸ்ட் இண்டீஸ் அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது பந்துவீசிய முகமது சிராஜ் முதல் 4 பந்துகளில் 8 ரன்களை விட்டுக்கொடுத்தார். அவர் வீசிய 5வது பந்தை சந்தித்த ரோமரியோ ஷெப்பர்ட், பந்தை ஒயிடு விடுகிறார். வேகமாக அழுத்தி வீசப்பட்ட அந்த பந்து மிக வேகமாக சென்றது. அங்கு கீப்பராக இருந்த சஞ்சு ஒரு ஃபுள் டைவ் அடித்து பந்தை தடுக்கிறார். அவரின் டைவ்வை பார்த்த வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஹொசைன் அதற்கு மேல் ரன் ஓட விரும்பாமல் அங்கேயே நின்று விட்டார்.

இப்படியாக சஞ்சுவின் அந்த அசத்தலான டைவ் இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தது. அவரின் இந்த அசத்தல் முயற்சியை கண்டு களித்த கிரிக்கெட் ரசிகர்கள் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருவதோடு, அவர் அடிக்கும் அந்த டைவ் புகைப்படத்தை சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர். தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பகிரப்பட்டு வரும் அந்த புகைப்படம் இணைய மற்றும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Sanju samson saves a crucial boundary helps india with a 3 run win over