Advertisment

இளம் வீரருக்கு தொடர்ந்து மறுக்கப்படும் 'இந்திய அணி' வாய்ப்பு; இதுதான் காரணமாம்!

Reasons behind sanju samson being left out of India's squad Tamil News: இந்திய கிரிக்கெட் அணியில் தனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்ட அதிருப்தியை சஞ்சு சாம்சன் தனது ட்விட்டர் பதிவிலும் வெளிப்படுத்தி இருந்தார்.

author-image
WebDesk
New Update
Sanju Samson Tamil News: reason behind sanju samson being left out of India's squad

 Sanju Samson Tamil News: ஐபிஎல் தொடருக்கான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வழிநடத்தி வருபவர் இளம் வீரர் சஞ்சு சாம்சன். இந்தாண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் 14 போட்டிகளில் விளையாடிய இவர் 484 ரன்கள் குவித்தார். மேலும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சிறப்பாக வழிநடத்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தார்.

Advertisment
publive-image

இதனால் அவருக்கு டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணியில் இடம் கிடைக்கும் என பெரிதும் எதிர்பாக்கப்பட்டது. ஆனால், அவருக்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. டி20 உலக கோப்பை தொடரில் இருந்து இந்திய அணி லீக் சுற்றோடு வெளியேறிய நிலையில் தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற உள்ள டி20 மற்றும் டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியை பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது. இந்த பட்டியலிலும் சஞ்சுவுக்கு இடம் கிடைக்கவில்லை.

publive-image

நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு மறுக்கப்படது தற்போது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தனக்கு இந்திய அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்ட அதிருப்தியை சஞ்சு சாம்சனும் தனது ட்விட்டர் பதிவில் வெளிப்படுத்தி இருந்தார். அந்த பதிவில் தான் பறந்து பறந்து கேட்ச் பிடித்த புகைப்படங்களை பகிர்ந்திருந்தார்.

இந்த நிலையில், சஞ்சு சாம்சனுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காததற்கான காரணம் வெளிவந்துள்ளது. இந்திய அணிக்காக கடந்த 2015ம் ஆண்டு அறிமுகமான சஞ்சு சாம்சன் இதுவரை 10 போட்டிகளில் விளையாடி 117 ரன்கள் மட்டுமே குவித்துள்ளார். அவர் கடைசியாக இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்ட தவான் தலைமையிலான இந்திய அணியில் இடம் பெற்று இருந்தார்.

publive-image

சரியான துவக்கம் கிடைக்காமல் தடுமாறிய அவர் சொதப்பலான ஆட்டத்தையே வெளிப்படுத்தினார். இதனால், ஐபிஎல் தொடர்களில் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்த சஞ்சு சாம்சன் சர்வதேசப் போட்டிகளில் சரியான அளவில் சிறப்பாக விளையாட முடியவில்லை என்கிற விமர்சனம் வைக்கப்பட்டது.

publive-image

தவிர, இந்திய அணியில் ஏற்கனவே ரிஷப் பண்ட், கேஎல் ராகுல், இஷான் கிஷன் என மூன்று விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன்கள் உள்ளனர். இந்த காரணத்தாலும் அவருக்கு சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு இருக்கலாம் என கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Sports Cricket Indian Cricket Team Rajasthan Royals T20 Sanju Samson Ipl 2021
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment