/indian-express-tamil/media/media_files/43bCFh977fQcY3s7p1k4.png)
இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் சர்ஃபராஸ்கான்- ஜெய்ஸ்வால் குறும்பாக மோதிக் கொண்டனர்.
Sarfraz Khan | India Vs England | இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், ஜெய்ஸ்வால் 200 அடிக்க, சர்பராஸ் கான் 50 ரன்கள் அடிக்க அதற்குபிறகு இரண்டு வீரர்களும் இங்கிலாந்து பவுலர்களை சிக்சர்களாக பறக்கவிட்டு அடிக்குமேல் அடிகொடுத்தனர்.
இவர்கள் இருவரையும் கேப்டன் ரோஹித் சர்மா அனுசரித்து சென்றார். இந்த நிலையில், ஜெய்ஸ்வால் மற்றும் சர்ஃபராஸ் கான் ஆகியோர் முறையே 198 மற்றும் 48 ரன்களில் களத்தில் இருந்தனர்.
Yashasvi Jaiswal said, "I'm really happy for Sarfaraz Khan. We celebrate each other's success, we know each other for the last 3-4 years now". pic.twitter.com/kGFoSqso4v
— Mufaddal Vohra (@mufaddal_vohra) February 18, 2024
அப்போது, ரன்கள் எடுக்க இருவரும் ஓடுவதில் ஒருவருக்கொருவர் களத்தில் முட்டிக்கொண்டனர். இது பார்வையாளர்களை உற்சாகத்தில் சப்தமிட செய்தது.
அதாவது, சர்பராஸ் கான் 47 ரன்களில் இருந்த போது ரெஹான் அகமது வீசிய பந்தில் கவர் சைடில் தட்டிவிட்டு 2 ரன்களுக்கு ஜெய்ஸ்வாலை அழைப்பார்.
— Jas Pope (@jas_pope93438) February 18, 2024
ஆனால் ஜெய்ஸ்வால் மறுத்துவிட்டார். அதற்கு யோவ், எளிதாக இரண்டு ரன்கள் எடுத்திருக்கலாம்; என்ன செய்கிறார் என சர்ஃபராஸ் கான் கோபமுறுவார்.
தொடர்ந்து இருவருக்கும் இடையேயான இந்தச் செல்ல சண்டை 2 ஓவர்கள் தொடர்ந்து நீடித்தது. அட பாவிகளா? என்னப்பா நீங்க இப்படி சின்னப் பிள்ளை தனமாக சண்டை போடுறீங்க என எண்ணும்படி இது இருந்தது.
Rajkot fans were saying Rohit Sharma to not declare the innings as they were waiting for Sarfaraz Khan's century and loving the Jaiswal show. 😂👏 pic.twitter.com/nrF5IjS2ll
— Mufaddal Vohra (@mufaddal_vohra) February 18, 2024
இந்த நிலையில் ஜெய்ஸ்வால் இரு சதமும், சர்ஃபராஸ் கான் அரை சதமும் அடிக்க அதன்பின்னர் ஆட்டம் சூடுபிடித்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.