Advertisment

'எனக்கு 100; தம்பிக்கு 100'... இரட்டை சதம் விளாசிய சர்ஃபராஸ் கான் நெகிழ்ச்சி!

"எனது குடும்பத்தினரிடம் நான் ஒரு உறுதியை அளித்திருதேன். அது, நான் இந்தப் போட்டியில் நன்றாக பேட்டிங் ஆடி செட் ஆகி 50 ரன்களை தாண்டி விட்டால் நிச்சயம் 200 ரன்கள் அதாவது இரட்டை சதம் விளாசுவேன் என்று கூறினேன்." என்று சர்ஃபராஸ் கான் கூறினார்.

author-image
WebDesk
New Update
Sarfaraz Khan Full fills Promise Made To Family After Brother Musheer khan Accident Tamil News

"இப்போது இரட்டை சதம் அடித்துளேன். இதில், எனக்கு 100 ரங்கள், என் தம்பிக்கு 100 ரன்கள்" என்று கூறி சர்ஃபராஸ் கான் நெகிழ்ந்துள்ளார்.

மும்பை - ரெஸ்ட் ஆப் இந்தியா அணிகளுக்கு இடையிலான இரானி கோப்பை தொடருக்கான டெஸ்ட் போட்டி லக்னோவில் கடந்த 1 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ரெஸ்ட் ஆப் இந்தியா கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். 

Advertisment

இதனையடுத்து முதல் இன்னிங்சில் ஆடிய மும்பை அணி 537 ரன்களை குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சர்ஃபராஸ் கான் 222 ரன்கள் குவித்தார். கேப்டன் ரஹானே 97 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து  முதல் இன்னிங்சில் ஆடிய ரெஸ்ட் ஆப் இந்தியா 416 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக அபிமன்யு ஈஸ்வரன் 191 ரன்களும், துருவ் ஜூரல் 93 ரன்களும் எடுத்தனர். 

இதனைத் தொடர்ந்து, 2வது இன்னிங்சில் விளையாடி வரும் மும்பை 4வது நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்து 274 ரன்களுடன் முன்னிலையில் உள்ளது. சர்ஃபராஸ் கான் 9 ரன்னுடனும், தனுஷ் கோட்யான் 20 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். நாளை கடைசி நாளான 5ம் நாள் ஆட்டம் நடைபெற உள்ளது. 

சர்ஃபராஸ் கான் நெகிழ்ச்சி 

இந்த நிலையில், இந்தப் போட்டியில் மும்பை அணியாக ஆடி வரும் சர்ஃபராஸ் கான் முதல் இன்னிங்சில் இரட்டை சதம் அடித்து அசத்தி இருந்தார். இதன் மூலம் இரானி கோப்பை வரலாற்றில் முதல் மும்பை வீரராக சர்ஃபராஸ் கான் வரலாற்று சாதனையை படைத்தார். அதாவது, இரானி கோப்பை வரலாற்றில் இரட்டை சதம் அடித்த முதல் மும்பை வீரர் என்கிற வரலாற்று சாதனையை அவர் படைத்து அசத்தினார். அவருக்கு ரசிகர்கள், வீரர்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகள் தெரிவித்தனர். 

இந்தப் போட்டிக்கான மும்பை அணியில் சர்ஃபராஸ் கான் தம்பி முஷீர் கான் விளையாட இருந்த நிலையில், சாலை விபத்தில் சிக்கி காயமடைந்தார். தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதன் காரணமாக அவர் இந்த போட்டியில் இருந்து விலகும் சூழல் ஏற்பட்டது. இந்த நிலையில், தனது தம்பி குறித்து பேசிய சர்ஃபராஸ் கான், "எனது தம்பி முஷீர் விபத்தில் சிக்கி விட்டார். 

எனது குடும்பத்தினரிடம் நான் ஒரு உறுதியை அளித்திருதேன். அது, நான் இந்தப் போட்டியில் நன்றாக பேட்டிங் ஆடி செட் ஆகி 50 ரன்களை தாண்டி விட்டால் நிச்சயம் 200 ரன்கள் அதாவது இரட்டை சதம் விளாசுவேன் என்று கூறினேன். அதன்படி, இப்போது இரட்டை சதம் அடித்துளேன். இதில், எனக்கு 100 ரங்கள், என் தம்பிக்கு 100 ரன்கள்" என்று கூறி அவர் நெகிழ்ந்துள்ளார்.  

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Indian Cricket Sarfraz Khan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment