இங்கிலாந்து- இந்தியா கிரிக்கெட் அணிகள் மோதும் 2ம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, விசாகப்பட்டினத்தில் பிப்.2ஆம் தேதி தொடங்குகிறது.
இந்தப் போட்டியில், கே.எல்.ராகுல், ரவீந்திர ஜடேஜா காயம் காரணமாக வெளியேறி உள்ளனர். தொடர்ந்து, சர்ஃபராஸ் கான் சேர்க்கப்பட்டுள்ளார்.
சர்ஃபராஸ் கடந்த இரண்டு ஆண்டுகளாக உள்நாட்டு கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இந்த நிலையில், அவர் அணியில் சேர்க்கப்பட்டதை சமூக ஊடகங்களில் பல ரசிகர்கள் வரவேற்றுள்ளனர்.
இந்த நிலையில் சூர்ய குமார் யாதவ் ட்விட்டரில், “கொண்டாட்டத்துக்கு தயாராகுங்கள்” எனத் தெரிவித்துள்ளார். சிறிது நேரம் கழித்து, சர்ஃபராஸ் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தனது தந்தையுடன் சேர்ந்து இருக்கும் படத்தையும் பகிர்ந்துள்ளார்.
ஜடேஜாவுக்கு தொடை தசையில் காயம் ஏற்பட்டுள்ளது. அதேநேரத்தில், கே.எல். ராலுக்கு வலது தொடையில் தசை பிடிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“