/indian-express-tamil/media/media_files/yarLgzTv5Kw1nyVJlCxT.jpg)
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதல் இரு இன்னிங்ஸிலும் அரை சதம் அடித்து கவனம் ஈர்த்தவர் சர்ஃபராஸ் கான்.
Sarfraz Khan | இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானவர் சர்ஃபராஸ் கான். ராஜ்கோட்டில் நடந்த போட்டியில் இவர் முதல் இன்னிங்ஸில் 62 ரன்னிலும், அடுத்த இன்னிங்ஸில் 68 ரன்னிலும் அவுட் ஆனார்.
சர்ஃபராஸ் கானின் ஆட்டத்தை பார்த்து அவரது தந்தை நவ்ஸத் மற்றும் சர்ஃபராஸ் கான் மனைவி ரோமனா ஸகூர் பெருமகிழ்ச்சி அடைந்தனர்.
கிரிக்கெட்டில் அதிரடி காட்டும் சர்ஃபராஸ் கான், காதலிலும் சாகசம் காட்டியுள்ளார். இவர் கடந்தாண்டு ஆகஸ்ட் 6ஆம் தேதி ரோமனா ஸகூரை இரகசியமாக திருமணம் செய்துகொண்டுள்ளார்.
ரோமனா டெல்லியில் எம்.எஸ்.சி பயிலும்போது சர்ஃபராஸ் கானை சந்தித்துள்ளார். அப்போது அவரிடம் சர்ஃபராஸ் கான், ரோமனாவிடம் தனது காதலை தெரிவித்துள்ளார்.
இருவருக்கும் ஒரே வயது (26) ஆகும். இருவரின் திருமணத்துக்கு சர்ஃபராஸ் கானின் குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், இருவரின் திருமணம் நடந்துள்ளது.
ராஜ்கோட்டில் இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக சர்ஃபராஸ் கான் தனது முதல் இந்திய தொப்பியை பெற்றார்.
அப்போது, எல்லைக் கோட்டுக்கு வெளியே நின்ற அவரது தந்தையை காண ஓடினார். அங்கு அவரது கண்ணீருடன் தந்தையும் மனைவியும் பெருமிதத்தில் ஆரவாரம் செய்தனர்.
கான் தனது தந்தை நௌஷாத் கானை கட்டிப்பிடித்து, மதிப்புமிக்க இந்திய டெஸ்ட் தொப்பியை அவரிடம் கொடுத்தார். நௌஷாத் தொப்பியை முத்தமிட்டார், அவர்கள் மூவரும் கண்ணீருடன் இருந்தனர்.
இந்தக் காட்சிகள் இணையத்தில் வைரலாகின. பலரும் சர்ஃபராஸ் கானை வாழ்த்தினார்கள் என்பது நினைவு கூரத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.