scorecardresearch

சவுராஷ்டிரா தமிழ் சங்கமத்தின் புதிய முயற்சி: விளையாட்டு திருவிழா தொடக்கம்

சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் நடத்தும் விளையாட்டு சேலஞ்சர்ஸ் டிராபியில் டென்னிஸ், டேபிள் டென்னிஸ், கபடி, நீச்சல் மற்றும் கைப்பந்து போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

Saurashtra Tamil Sangamam helds Sports fest Tamil News
X According to an official release from the state government, the sports festival—Sports Challengers Trophy—will include competitions in tennis, table tennis, kabaddi, swimming and volleyball.

 Saurashtra Tamil Sangamam Sports fest Tamil News: சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் முயற்சியின் ஒரு பகுதியாக, சவுராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு இடையேயான பழங்கால உறவுகளைக் கொண்டாடும் வகையில், குஜராத்தில் இரு மாநிலங்களின் ஒலிம்பிக் சங்கங்களின் கீழ் விளையாட்டு விழா நடத்தப்பட உள்ளது. வருகிற ஏப்ரல் 19 முதல் 22 வரை பவ்நகரில் இந்தத் திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாநில அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டின்படி, விளையாட்டு திருவிழாவான விளையாட்டு சேலஞ்சர்ஸ் டிராபியில் டென்னிஸ், டேபிள் டென்னிஸ், கபடி, நீச்சல் மற்றும் கைப்பந்து போட்டிகள் அடங்கும்.

சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சி ஏப்ரல் 17 முதல் 30 வரை திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சிக்காக தமிழகத்திலிருந்து மக்களை மாநிலத்திற்கு அழைத்துச் செல்ல சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. வருகிற ஏப்ரல் 17ம் தேதி முதல் ரயில் மதுரையில் இருந்து புறப்படுகிறது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Saurashtra tamil sangamam helds sports fest tamil news