2003 ஆம் ஆண்டில், இளம் வீராங்கனை சவிதா புனியா, ஹரியானா அரசாங்கத்தின் ஹாக்கி நர்சரியில் பயிற்சியாளர் சுந்தர் சிங் கராப்பின் கீழ் சேர்ந்தபோது, அவர் அடிக்கடி தனது கிராமமான ஜோத்காவிலிருந்து ஹரியானா அரசுப் பேருந்துகளில் தனது கோல்கீப்பரின் கிட்டை எடுத்துச் செல்வார். பேருந்து நடத்துனர்கள் அவர்களது கால்களால் தனது கிட்டைத் தொடுவது பற்றியும் இரண்டு கிட் பேக்குகளை பேருந்தில் அனுமதிக்காது பற்றியும் சவிதா அடிக்கடி தன் தந்தையிடம் புகார் செய்வாள்.
2021 ஆகஸ்ட் 2, திங்கள்கிழமையன்று, 30 வயதான சவிதா ஆஸ்திரேலிய அணியின் ஒவ்வொரு தாக்குதலையும் முறியடித்தது, இந்தியா 1-0 வெற்றியைப் பதிவுசெய்து டோக்கியோ ஒலிம்பிக்கின் அரையிறுதிக்கு வர உதவியது. ஆட்டத்தின் இறுதி நிமிடங்களில், ஆஸ்திரேலியாவுக்கு இரண்டு பெனால்டி கார்னர் கிடைத்தது, ஆனால் சவிதா அவற்றை வெற்றிகரமாக தடுத்தார். ஆஸி வீரர்களிடமிருந்து பந்தை தள்ளுவதற்கு சவிதா தரையில் கிடந்தபோது, வர்ணனையாளர்கள் சொன்னார்கள்: "அவர் இந்திய ஹாக்கிக்கு மிக முக்கியமான சேமிப்பை செய்துள்ளார்."
தந்தை மகிந்தர் சிங் புனியா சவிதாவின் ஆரம்ப நாட்களை நினைவு கூர்ந்தார்.
"மற்ற வீராங்கனைகளைப் போலல்லாமல், சவிதா எங்கள் கிராமத்தில் இருந்து உள்ளூர் பேருந்துகளில் ஹாக்கி நர்சரிக்குச் செல்லும் போது கோல்கீப்பிங் கிட்டுக்காக கூடுதல் பையை எடுத்துச் செல்ல வேண்டியிருந்தது. நிறைய முறை, கண்டக்டர்கள் அவளிடம் பைகளை கால்களை கொண்டு ஒதுக்கி வைத்தும் பையை நகர்த்தும்படியும் கேட்டார்கள். சில நேரங்களில், பெரிய பைகள் காரணமாக அவர்கள் அவளை ஏற விடமாட்டார்கள். சில நேரங்களில், அவள் அழுவாள், ஆனால் கண்டக்டர்கள் அவளது பையை ஒதுக்கி உதைத்தது தான், அவளால் ஏற்றுக்கொள்ள முடியாதது, ”என்று மகிந்தர் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறினார்.
அவரது தந்தை மருந்தாளுனராக பணிபுரிவதால், விவசாயியான சவிதாவின் தாத்தா ரஞ்சித் சிங் புனியா, ஹாக்கி போட்டிகளின் வானொலி வர்ணனையைக் கேட்க செய்ததும், உள்ளூர் விளையாட்டுகளைப் பார்க்க அழைத்துச் சென்றதும், ஹாக்கியில் சவிதாவின் ஆர்வம் வளர காரணம். மகிந்தர் சவிதாவை அருகில் உள்ள சிர்சாவில் உள்ள ஹாக்கி நர்சரிக்கு 2003 ல் அழைத்துச் சென்றார், அங்கு பயிற்சியாளர் சுந்தர் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். சவிதா ஆரம்பத்தில் ஒரு முன்கள வீரராக அல்லது மிட்ஃபீல்டராக இருக்க விரும்பினாலும், அவளுடைய தாத்தாவின் விருப்பப்படி, சுந்தர் அவளை ஒரு கோல்கீப்பராக உருவாக்கினார்.
"சவிதா தனது தந்தையிடமும் என்னிடமும் ஒரு மிட்பீல்டராக அல்லது முன்கள வீரராக இருக்க விரும்புவதாக சொன்னது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. ஆனால் எங்களது பயிற்சிகள் மற்றும் சோதனைகளில் சவிதாவின் பயிற்சியைப் பார்த்தபோது, அவளுடைய விரைவான எதிர்வினை நேரம் மற்றும் உயரத்தால் நான் ஈர்க்கப்பட்டேன். அதனால் அவளை கோல்கீப்பராக ஆகும்படி அவளுடைய தந்தைக்கு நான் பரிந்துரைத்தேன், ”என்று சுந்தர் நினைவு கூர்ந்தார்.
ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட கோல்கீப்பர்களுக்கு இரண்டு கிட்களை மட்டுமே நர்சரியில் வைத்திருப்பதால், சவிதாவுக்கு தனியாக ஹாக்கி கிட் ஒன்றை வாங்குமாறு சுந்தர் மகிந்தரிடம் கேட்டுக்கொண்டார். "அவள் ஒரு கோல்கீப்பராக மாறுவதில் எங்களுக்கு சிறிது சந்தேகம் இருந்தபோது, சிர்சாவிடமிருந்து அவளுக்கு ஒரு புதிய ஹாக்கி கிட்டைப் பெற நான் ரூ .17,000 செலவிட்டேன். அவள் எப்பொழுதும் தன் கிட்டை பாதுகாத்து கூடுதல் கவனிப்புடன் இருப்பாள். அவள் எப்பொழுதும் ஹாஸ்டலில் இருப்பாள், அவசர காலங்களில் மட்டுமே வீட்டிற்கு வருவாள். எப்படியாவது, அவள் ஒரு நாள் நம்மை பெருமைப்படுத்துவாள் என்று நம்பினேன், ”என்று மகிந்தர் கூறுகிறார்.
நிலையான உயர்வு
பயிற்சியாளர் சுந்தர் 2003 முதல் 2007 வரை சவிதாவுக்கு பயிற்சி அளித்தார், பின்னர் சுந்தர் ஹிசாருக்கு மாற்றப்பட்டார், அங்கு அவர் சவிதாவை அழைத்துச் சென்று, அங்கு சவிதா இந்திய விளையாட்டு ஆணைய மையத்திற்கு தேர்வு செய்யப்படுவதற்கு முன்பு வரை பயிற்சி அளித்தார். சவிதா அரியானா ஜூனியர் அணிகளுக்காக விளையாடுவார் மற்றும் தற்போதைய இந்திய கேப்டன் ராணி உட்பட 10 க்கும் மேற்பட்ட சர்வதேச வீரர்களை உருவாக்கிய பிரபலமான நகரமான ஷாபாத்தின் வீரர்களுடன் அடிக்கடி ஒரு இடத்திற்கு போட்டியிடுவார். சவிதா விரைவில் தேசிய தேர்வாளர்களைக் கவர்ந்தார் மற்றும் 2008 இல் தனது இந்திய அணி அறிமுகத்திற்கு முன் 2007 இல் ஜூனியர் இந்திய அணியில் இடம் பிடித்தார்.
ஒரு கோல்கீப்பராக, அவளது கால்கள் செயல்பாடு மற்றும் கை மற்றும் கால் பொசிசன் அவளது ஜூனியர் நாட்களில் கூட நன்றாக இருந்தது, மேலும் அணியின் முன்கள வீரர்கள் மற்றும் மிட்ஃபீல்டர்களுடன் அவர்களின் சிந்தனையைப் புரிந்துகொள்ள நிறைய நேரம் செலவிடுவதை உறுதி செய்வார். கோடை அல்லது குளிர்காலமாக இருந்தாலும், அவள் எப்போதும் கோல் கீப்பிங் கிட்டில் பயிற்சிக்கு தயாராக இருந்தாள். அவளுக்கு நிறைய பொறுமை இருந்தது, அது அவளுக்கு உதவியது. ஒருமுறை டெல்லியில் நடந்த போட்டியில், ஹரியானாவின் இரண்டு அணிகள் (ஷாபாத்தில் இருந்து ஒன்று ஹிசாரில் இருந்து மற்றொன்று) இறுதிப் போட்டியில் விளையாடியது, ஹிசார் தோற்றாலும், முன்னாள் இந்திய வீரரும் பயிற்சியாளருமான எம்.கே.கௌஷிக் மற்றும் அம்ரித் போஸ் ஆகியோர் ஜூனியர் இந்திய அணி முகாமில் சேர்ப்பதற்கு சவிதா பெயரை முன்வைத்தனர்,” சுந்தர் நினைவு கூர்ந்தார்.
திங்கள்கிழமை காலிறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, சவிதா பல சேமிப்புகளைச் செய்தார். 2017 ஆம் ஆண்டில் இந்தியா ஆசிய கோப்பையை வெல்ல அவர் உதவினார், அங்கு அவர் சிறந்த கோல்கீப்பராக அறிவிக்கப்பட்டார், மேலும் 2018 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் பெற்றார்.
சுந்தர் திங்கள்கிழமை போட்டியில் சவிதாவுக்கான புள்ளிகளைக் கவனித்தார். "இன்று, அவள் எப்போதும் பந்தின் லைனில் இருந்தாள், மேலும் சில நேரடி சேமிப்புகளையும் செய்தாள். ஆஸ்திரேலியாவில் அனுபவம் வாய்ந்த பெனால்டி கார்னர் நிபுணர்கள் இல்லையென்றாலும், கடைசி கால் பகுதியில் இந்தியா தப்பிப்பிழைத்ததை உறுதி செய்தார். முன்னதாக போட்டிகளில், அவள் ஒரு முறை பந்தின் லைனைப் பின்பற்றவில்லை அதனால் ஒரு கோலை உள்ளே விட்டுவிட்டார். அவள் அத்தகைய தவறுகளிலிருந்து கற்றுக்கொண்டாள், நம்பிக்கையுடன், அரையிறுதியிலும், அவள் ஒரு சுவர் போல இருப்பாள்.
ஹரியானா ஜூனியர் அணியிலிருந்து சவிதாவின் எழுச்சியைக் கண்ட பயிற்சியாளர் ஆசாத் சிங் மாலிக்கும் போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்தார். "அவளுடைய மிகப்பெரிய பலம் அவளுடைய பொறுமை மற்றும் தாக்குதல்களால் அவள் குழப்பமடையவில்லை. அவளுக்கு தெளிவான மனது உள்ளது மற்றும் எதிரிகளின் முன்னோக்கு லைன் அல்லது பெனால்டி கார்னர் நகர்வுகள் பற்றி தடுப்பாளர்களின் உள்ளீடுகளை தேடிக்கொண்டே இருக்கிறது, ”என்கிறார் மாலிக்.
சவிதாவின் தாயார் லீலாவதி புனியாவைப் பொறுத்தவரை, சவீதா திரும்பியவுடன் தனது கோல்கீப்பிங் கிட்டை என்ன செய்வார் என்று அவளுக்குத் தெரியும். பதக்கம் கிடைத்தாலும் அல்லது பதக்கம் இல்லாவிட்டாலும், அவர் எப்போதும் தனது பழைய கோல் கீப்பிங் கிட்டை எங்கள் கிராமத்திலோ அல்லது சிர்சாவிலோ தேவைப்படும் வீரர்களுக்கு வழங்குவதை உறுதி செய்வார். ஆனால் நிச்சயமாக, அவள் ஒலிம்பிக்கில் ஒரு பதக்கத்துடன் திரும்புவாள், இதன் மூலம் பல சவிதாக்கள் ஈர்க்கப்படுவார்கள், ”என்கிறார் லீலாவதி.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.