நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி-20 போட்டியில், 48 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.
பாகிஸ்தான் அணி 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்பேற்று நியூசிலாந்து அணிக்கு எதிராக ஆடி வருகிறது. முதல் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. இன்று நடைபெற்ற 2 வது போட்டியில் விளையாடிய பாகிஸ்தான் அணி, டாஸ்ஸில் வென்று பேட்டிங்கை துவக்கியது. ஆட்டத்தின் ஆரம்பத்தில் இருந்தே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாகிஸ்தான் வீரர்கள் பகார் ஜமான் (50), அஹமது செஷாத் (44) ஆகியோர் அணிக்கு பலம் சேர்த்தனர். 20 ஓவர் முடிவில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 201 ரன்கள் எடுத்திருந்தனர்.
அதன் பின்பு களம் இறங்கிய முன்னணி வீரர்கள் ரசிகர்களை ஏமாற்றி குறைந்த ரன்னில் அவுட் ஆகினர். போட்டியின் முடிவில், நியூசிலாந்து அணி 18.3 ஓவரில் 153 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியது. இதையடுத்து பாகிஸ்தான் அணி, 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரை 1-1 என சமன் செய்தது.
A complete performance with both bat and ball sees Pakistan break out of their slump, beating New Zealand by 48 runs at Eden Park.
➡️ https://t.co/YBK3JM4P5K #NZvPAK pic.twitter.com/rUJLUiGInQ
— ICC (@ICC) 25 January 2018