Asia Cup 2022 - indian cricket team Tamil News: ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. மிகவும் நடைபெற்று வரும் இந்தத்தொடரில் நடப்பு சாம்பியனான இந்தியாவுக்கு நல்ல தொடக்கம் கிடைத்தது. முதலில் விளையாடி லீக் சுற்றில் இந்திய அணி அதன் பரம போட்டியாளரான பாகிஸ்தானை வீழ்த்தியது. அதன்பிறகு ஹாங்காங் அணியை வீழ்த்திய இந்தியா ஆப்கானிஸ்தான் அணிக்கு பிறகு 2-வது அணியாக சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது.
சூப்பர் 4 சுற்றில் மீண்டும் பாகிஸ்தான் அணியைச் சந்தித்த இந்தியா, இம்முறை பந்துவீச்சு மற்றும் சொதப்பல் ஃபீல்டிங்கால் போரடித் தோற்றது. இந்த தோல்வி இந்திய அணிக்கு தற்போது இக்கட்டான சூழலை உருவாக்கியுள்ளது. இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற, சூப்பர் 4 சுற்றில் மீதமுள்ள 2 ஆட்டங்களிலும் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதில், இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய இன்று செவ்வாய்கிழமை விளையாடுகிறது.
நடப்பு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில், கடந்த இரண்டு ஆட்டங்களில் பெரிய ஸ்கோரைத் துரத்திய இலங்கை திடீரென அதன் சர்வதேச ஃபார்மை மீட்டெடுத்துள்ளது. எனவே, அந்த அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி அதன் அசத்தலான பேட்டிங் மற்றும் பந்துவீச்சை வெளிப்படுத்த வேண்டும். இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணி குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் இந்திய தொடக்க ஆட்டக்காரர் வீரேந்திர சேவாக், இலங்கைக்கு எதிரான இந்திய அணியின் ஆட்டம் ஒரு 'டூ ஆர் டை' போட்டியாக இருக்கும் என்றும், இது பாகிஸ்தானின் ஆண்டாக இருக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கிரிக்பஸ்ஸில் பேசியுள்ள சேவாக், "இந்தியா தற்செயலாக மற்றொரு போட்டியில் தோற்றால், அவர்கள் தொடரிலிருந்து வெளியேறுவார்கள். இதனால், பாகிஸ்தானுக்கு நன்மை உண்டு. ஏனெனில் அவர்கள் ஒரு போட்டியில் தோற்று மற்றொரு போட்டியில் வெற்றி பெற்றால், அவர்களின் நிகர ரன் விகிதம் அவர்களை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் செல்லும்.
ஒரு போட்டியில் தோற்று இரண்டில் வெற்றி பெற்ற இந்தியா ஒன்றில் தோற்று மற்றொன்றில் தோற்றால் அவுட் தான். அதனால் இந்தியா மீது அழுத்தம் அதிகம். நீண்ட நாட்களுக்கு பிறகு இறுதிப்போட்டியில் விளையாடும் பாகிஸ்தான் ஆசிய கோப்பையில் நீண்ட நாட்களுக்கு பிறகு இந்தியாவை வீழ்த்தியது.
'இது பாகிஸ்தானின் ஆண்டாகவும் இருக்கலாம்'
பாகிஸ்தான் இன்னும் ஒரே ஒரு வெற்றி பெற்றால், இறுதிப் போட்டியை உறுதி செய்யும். அப்படி அந்த அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தால் ஆசிய கோப்பை தொடரில் மூன்றாவது பட்டத்தை கைப்பற்ற வாய்ப்பும் உள்ளது. பாகிஸ்தான் அணி கடைசியாக 8 ஆண்டுகளுக்கு முன்பு 2014-ம் ஆண்டு ஆசிய கோப்பையில் இறுதிப் போட்டியில் விளையாடியது குறிப்பிடத்தக்கது.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.