இந்தியா அணிக்கு உதவ டிராவிட்டை ஆஸ்திரேலியாவுக்கு அனுப்ப வேண்டும் : வெங்க்சர்க்கார்

Rahul Dravid to help team India in the ongoing Test series : டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்தியா அணிக்கு உதவ ராகுல் டிராவிட்டை ஆஸ்திரேலியாவுக்கு அனுப்ப வெங்க்சர்க்கார் கோரிக்கை

Rahul Dravid to help team India in the ongoing Test series : டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்தியா அணிக்கு உதவ ராகுல் டிராவிட்டை ஆஸ்திரேலியாவுக்கு அனுப்ப வெங்க்சர்க்கார் கோரிக்கை

author-image
WebDesk
New Update
இந்தியா அணிக்கு உதவ டிராவிட்டை ஆஸ்திரேலியாவுக்கு அனுப்ப வேண்டும் : வெங்க்சர்க்கார்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்தியா அணிக்கு உதவ ராகுல் டிராவிட்டை ஆஸ்திரேலியாவுக்கு அனுப்புமாறு இந்திய கிரிக்கெட் வீரரும், அணித் தேர்வாளருமான திலீப் வெங்க்சர்க்கார் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு (பிசிசிஐ) பரிந்துரைத்தார்.

Advertisment

தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில்,"  முன்னாள் கிரிக்கெட் வீரர் டிராவிட்டை ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பினால் இந்திய வீரர்களுக்கு  மிகப்பெரிய ஊக்கமளிக்கும்" என்று கூறினார்.

"அந்நாட்டு மைதானங்களில் வேகப்பந்தை எவ்வாறு சமாளித்து விளையாடுவது என்பதை இந்திய அணி வீரர்களுக்கு டிராவிட் சிறந்த முறையில் வழிநடத்துவார் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அணிக்கு மிகப்பெரிய ஊக்கமாக இருக்கும். கடந்த ஒன்பது மாதங்களாக கோவிட் காரணமாக என்.சி.ஏ மூடப்பட்டுள்ளது. இந்தியாவில்,  அவர் அணி வீரர்களுக்கு பெரியளவில் பயிற்சி அளிக்க வில்லை,”என்று வெங்க்சர்க்கார் கூறினார்.

டிராவிட் தற்போது பெங்களூரில் உள்ள பி.சி.சி.ஐயின் தேசிய கிரிக்கெட் அகாடமியின் (என்.சி.ஏ) தலைவராக பணியாற்றி வருகிறார். 14 நாள் கட்டாய தனிமைப்படுத்துதல் என்பதை பொருட்படுத்தாமல் பி.சி.சி.ஐ டிராவிட்டை அனுப்ப வேண்டும்  என்று வெங்க்சர்க்கார்  கூறினார்.

Advertisment
Advertisements

14 நாள் கட்டாய தனிமைப்படுத்துதல் என்ற எடுத்துக் கொண்டாலும், ஜனவரி 7ம் தேதி தொடங்கும் மூன்றாம் டெஸ்ட்க்கு முன்னதாக ட்ராவிட் வலைப் பயற்சியில் இந்திய அணி வீரர்களுக்கு உதவ முடியும் என்றும் வெங்க்சர்கார் தெரிவித்தார்.

முன்னதாக, இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அடிலைடில்m மூன்றாம்  நாள் ஒரு விக்கெட் இழப்புக்கு ஒன்பது ரன் என்ற ஸ்கோருடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்தது. ஒன்பது விக்கெட் இழப்புக்கு 36 ரன் எடுத்திருந்த நிலையில் முகமது சமி காயம் காரணமாக போட்டியிலிருந்து வெளியேறினார்.

அணியின் முன்னணி வீரர்கள் சொற்ப ரன்னுக்கு விக்கெட்களை பறிகொடுத்தது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

India Vs Australia

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: