கிம்பெர்லேவின் De Beers Diamond Oval மைதானத்தின் கமெண்ட்ரி பாக்ஸில் இருந்து 2017ம் ஆண்டு ஒரு கமெண்ட்ரி வெளிவருகிறது. 'அடடா.. என்னவொரு பார்ட்னர்ஷிப் இது. தென்னாப்பிரிக்காவின் முதல் தர கிரிக்கெட்டில், இரண்டாவது விக்கெட்டுக்கு சேர்க்கப்பட்ட நான்காவது சிறந்த பார்ட்னர்ஷிப் இது. 'முத்துசாமி அசத்திவிட்டார்' என்று அந்த கமெண்ட்ரியின் நாதம் ரசிகர்களின் காது ஜவ்வுகளுக்கு அந்தப் பெயரை அழுத்தமாக பதிவு செய்தது.
Advertisment
அன்று டால்பின்ஸ் அணிக்காக இரண்டாவது விக்கெட்டுக்கு அடிக்கப்பட்ட பார்ட்னர்ஷிப் 355 ரன்கள்.
வான் வென் ஜார்ஸ்வெல்ட் - 203
செனூரன் முத்துசாமி - 181. சந்தித்த பந்துகள் 348. வயது 23.
யார்யா இது நம்மூரு ஆள் மாதிரி இருக்காப்ளயே-னு பார்க்குறீங்களா?... நம்மூரு ஆளே தான்.
இப்போது 25 வயதாகும் செனூரன் முத்துசாமி தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்டவர். பேட்டிங், பவுலிங் என ஆல் ரவுண்டராக வலம் வரும் முத்துசாமி டர்பனில் பிறந்தவர்.
முதல் தர கிரிக்கெட்டில் 69 போட்டிகளில் 3403 ரன்கள் குவித்திருக்கிறார். பந்துவீச்சில் 129 விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருக்கிறார். கடந்த 2017ம் ஆண்டு சிறந்த வீரர் விருதையும் வென்றிருக்கும் செனூரன் முத்துசாமி, இந்தியாவுக்கு எதிராக வரும் அக்.2ம் தேதி தொடங்கவிருக்கும் சர்வதேச டெஸ்ட் தொடரில், தென்னாப்பிரிக்க அணிக்காக களமிறங்க உள்ளார்.
இடது கை Orthodox ஸ்பின்னரான முத்துசாமி, இந்தியாவுக்கு எதிராக தனது முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியில் விளையாடவிருக்கிறார்.
தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியில் ஒரு தமிழர் விளையாடப் போவது நிச்சயம் நமக்கு பெருமை தானே!.
Advertisment
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news