அமெரிக்க ஓபன் டென்னிஸ் : கர்ஜிக்கும் சிங்கமான செரீனாவுடன் இறுதி ஆட்டத்தில் மோதும் 20 வயது ஜப்பான் புயல்!

முன்மாதிரியாக அவரை நினைக்கவில்லை. அவரை ஒரு எதிராளியாகவே பாவிக்கிறேன்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் பட்டத்துக்கான இறுதி ஆட்டத்தில் 9 முறை சாம்பியன் பட்டம் பெற்ற  செரீனா வில்லியமஸ் உடன் ஜப்பான் வீராங்கனை ஒசாகா  பலபரீட்சை நடத்துக்கிறார்.

அமெரிக்க ஓபன் டென்னிஸ் :

‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் இறுதி போட்டிகள் இன்று (8.9.18) நடைபெறுகின்றன.  நேற்று நடைப்பெற்ற  அரையிறுதிப் போட்டியில்  கர்ஜிக்கும் சிங்கமான  செரீனா வில்லியம்ஸ் நேர்செட்டில் செவஸ்தோவாவை  வீழ்த்தி 31 ஆவது முறையாக  அமெரிக்க ஓபன் டென்னிஸின்  இறுதிப்போட்டிக்குள்  நுழைந்தார்.

அதே போல் மற்றொரு களத்தில் நடந்த அரை இறுதி போட்டியில்   உலக தரவரிசையில் 19-வது இடம் வகிக்கும் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா அமெரிக்க வீராங்கனை மேடிசன் கீஸ்சை  பதம்  பார்த்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இதன் மூலம் கிராண்ட்ஸ்லாம் வரலாற்றில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய முதல் ஜப்பான் வீராங்கனை என்ற மகத்தான பெருமையை 20 வயதான நவோமி ஒசாகா பெற்றார்.

இந்நிலையில்  செரீனா – ஒசாகா இருவரும் இறுதிப் போட்டியில் இன்று நேருக்கு நேர் மோதிக் கொள்கின்றன.  இந்த ஆட்டத்தைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.   பரபரப்பாக  தொடங்கும் இந்த ஆட்டம்  இந்திய நேரப்படி  நள்ளிரவு 1.30 மணிக்கு நடைபெறுகிறது.

இறுதிப் போட்டியில் செரீனா வெற்றி பெற்றால் அது வரலாறாக மாறும். 36 வயதாகும் செரீனா சமீபத்தில்  ஒரு பெண் குழந்தைக்கு தாயானர்.   மகபேறு காரணமாக சிறிது நாட்கள் ஓய்வு எடுத்த அவர் பிரசவத்திற்கு  பிறகு கலந்துக் கொள்ளும் முதல்  அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஆகும்.

செரீனா வாகை சூடினால், அதிக கிராண்ட்ஸ்லாம் கைப்பற்றிய வீராங்கனையான ஆஸ்திரேலியாவின் மார்கரெட் கோர்ட்டின் (24 கிராண்ட்ஸ்லாம்) சாதனையை சமன் செய்து விடுவார் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம், இதற்கு முன்பு ஒசாகாவும்,  செரீனாவும் ஏற்கனவே மியாமி ஓபன் டென்னிஸ்  நேருக்கு நேர் மோதி உள்ளன.

அப்போது வெற்றி பெற்றது 20 வயது புயல் ஓசாகாத் தான்.   இறுதிப் போட்டியில்  செரீனாவுடன் மோதுவதும் குறித்து பேட்டியளித்திருந்த ஓசாகா, “ செரீனாவுக்கு எதிரான ஆட்டத்தை மற்றொரு ஆட்டமாக தான் கருதுகிறேன். என்னுடைய முன்மாதிரியாக அவரை நினைக்கவில்லை. அவரை ஒரு எதிராளியாகவே பாவிக்கிறேன்” என்று அதிரடியாக கூறியிருந்தார்.

மேலும், செரீனாவுக்கு எதிராக விளையாடுவது தன்னுடைய சிறுவயது கனவு என்று அவர் தெரிவித்திருந்தார். ஒசாகா, ஜப்பானில் உள்ள ஒசாகா என்ற இடத்தில் பிறந்தவர். ஆனால் 3 வயதிலேயே அவர் அமெரிக்காவுக்கு இடம் பெயர்ந்து விட்டார். இதன் காரணமாக, கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை அவர் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் தான் பெற வேண்டும்  என்று  பலமுறை தனது பேட்டிகளில் பதிவு செய்து வருகிறார்.

தனது எதிர் போட்டியாளரான ஓசாகா குறித்து செரீனா கூறியதாவது, “ நான் ஒருமுறைத்தான் ஒசாகா உடன் விளையாடியுள்ளேன். அவரின் விளையாட நுண்ணுக்கங்களை உற்று கவனித்துள்ளேன்.  எல்லாபோட்டிகளிலும்  விளையாடுவதுபோல் தான் இதிலும் விளையாடுவேன்.   ஆனால் பிரசவத்திற்கு பின்பு தற்போது என் உடலில் சிலமாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. இருந்த போது என்னுடைய முயற்சி என்றும் தோற்றதில்லை” என்று கூறியுள்ளார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Sports news in Tamil.

×Close
×Close