Advertisment

அதிவேக இரட்டை சதம்... சென்னை மண்ணில் வரலாறு படைத்த இந்திய வீராங்கனை ஷபாலி வர்மா!

தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான சென்னை டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்ததன் மூலம், பெண்கள் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேக இரட்டை சதம் அடித்த வீராங்கனை என்கிற சாதனையை ஷபாலி வர்மா படைத்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Shafali Verma breaks record for fastest double century in womens Tests Tamil News

பெண்களுக்கான டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் வேகமான இரட்டை சதம் விளாசினார் இந்திய வீராங்கனை ஷபாலி வர்மா.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

இந்தியா - தென்ஆப்பிரிக்கா பெண்கள் அணிகளுக்கு இடையிலான ஒரேயொரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் இன்று வெள்ளிக்கிழமை முதல் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி இலவசம் என்று அறிவிக்கப்பட்டது. 

Advertisment

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வருகிறது. இந்திய அணியில் தொடக்க வீராங்கனைகளாக ஷபாலி வர்மா- ஸ்மிரிதி மந்தனா ஜோடி களம் இறங்கினர். மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடியில் இருவரும் சதம் அடித்து அசத்தினர். தொடர்ந்து அற்புதமான பேட்டிங்கை வெளிப்படுத்தி முதல் விக்கெட்டுக்கு 292 ரன்கள் குவித்தனர். 

தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தொடக்க வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா 161 பந்துகளில் 27 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 149 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். அவரைத் தொடர்ந்து வந்த சுபா சதீஷ் 15 ரன்னில் ஆட்டமிழந்தார். இதன்பின்னர் களத்தில் இருந்த ஷபாலி வர்மாவுடன் ஜெமிமா ஜோடி சேர்ந்தார். 

சற்று நிதானமாக ஆடிய இந்த ஜோடியில், நிலைத்து நின்று அற்புதமான பேட்டிங்கை வெளிப்படுத்திய ஷபாலி வர்மா 194 பந்தில் இரட்டை சதம் அடித்து அசத்தினார். அவர் இரட்டை சதம் அடித்த நிலையில் 205 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார். 20 வயதான ஷபாலி வர்மா 197 பந்துகளில் 23 பவுண்டரிகள் 8 சிக்ஸர்களுடன் 205 ரன்கள் எடுத்து அசத்தினார். 

வரலாறு படைத்த ஷபாலி வர்மா

இந்நிலையில், தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான சென்னை டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்ததன் மூலம், பெண்கள் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேக இரட்டை சதம் அடித்த வீராங்கனை என்கிற சாதனையை ஷபாலி வர்மா படைத்துள்ளார். மேலும், இரட்டை சதம் விளாசிய இரண்டாவது இந்திய வீராங்கனை என்கிற பெருமையையும் ஷபாலி வர்மா படைத்துள்ளார். 2002ல் இந்திய மகளிர் அணியின் முன்னாள் கேப்டன் மித்தாலி ராஜ் இரட்டை சதம் அடித்து இருந்தார். அவருக்கு சக வீராங்கனைகளும், ரசிகர்களும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். 

முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 98 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 525 ரன்கள் எடுத்துள்ளது. ஹர்மன்ப்ரீத் கவுர் 42 ரன்களுடனும், ரிச்சா கோஷ் 43 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். நாளை சனிக்கிழமை காலை 9 மணிக்கு வழக்கும் போல் இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கும். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

India Vs South Africa indian women cricket
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment