Advertisment

சி.எஸ்.கே... சி.எஸ்.கே... சென்னை ரசிகர்களை குஷிப்படுத்திய பாலிவுட் பாட்ஷா - வீடியோ!

சென்னையில் தனது அணி கோப்பை வென்ற சூழலில், கே.கே.ஆரின் இணை உரிமையாளர் நடிகர் ஷாரு கான் சி.எஸ்.கே அணி ரசிகர்களை நோக்கி சி.எஸ்.கே... சி.எஸ்.கே... என ஆரவாரம் செய்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

author-image
WebDesk
New Update
Shah Rukh Khan chanting CSK CSK after KKR  IPL 2024 win video Tamil News

சி.எஸ்.கே... சி.எஸ்.கே... என ஆரவாரம் செய்து சென்னை ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார் நடிகர் ஷாரு கான்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Shah Rukh Khan | IPL 2024 | Kolkata Knight Riders: இந்திய மண்ணில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த 17-வது ஐ.பி.எல். தொடர் நேற்று ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவுற்றது. மிகவும் பரபரப்பாக அரங்கேறிய இறுதிப் போட்டியில் ஷ்ரேயாஸ் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 

Advertisment

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 18.3 -வது ஓவரில் 113 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனையடுத்து, 114 ரன்கள் கொண்ட எளிய வெற்றி இலக்கை துரத்திய கொல்கத்தா 10.3 ஓவர்களிலேயே இலக்கை எட்டிப்பிடித்து 3-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வாகை சூடியது. 

கொல்கத்தா அணியின் வெற்றியைத் தொடர்ந்து, அந்த அணியின் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடினார்கள். வெற்றிக்கான கடைசி ரன்னை வெங்கடேச ஐயர் எடுத்த போது, அணியின் வீரர்கள் மைதானத்திற்குள் வேகமாக வெற்றி களிப்பை வெளிப்படுத்தினார்கள். இதன்பிறகு, வீரர்களும், துணை ஊழியர்களும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தை சுற்றி வந்தார்கள். அவர்களுடன் அணியின் இணை உரிமையாளர் பாலிவுட் பாட்ஷா நடிகர் ஷாரு கான் வெற்றி உற்சாகத்தை வெளிப்படுத்தினார். 

எம்.ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தின் ஸ்டாண்டில் இருந்த சில சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்கள் (சி.எஸ்.கே) ஷாரு கானுக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். அப்போது அவர் அவர்களை நோக்கி சி.எஸ்.கே... சி.எஸ்.கே... என ஆரவாரம் செய்தார். என்ன தான் மற்றொரு அணியின் உரிமையாளராக இருந்தாலும், ஒரு முன்னாள் சாம்பியன் அணியின் ரசிகர்களுக்கு, அதுவும் தனது கோப்பை வெற்ற சூழலில் அந்த அணி ரசிகர்களை அவர் உற்சாகமூட்டியது நிகழ்வு ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Kolkata Knight Riders Shah Rukh Khan IPL 2024
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment