worldcup 2023 | India Vs Pakistan: 13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கிரிக்கெட்டின் பரம போட்டியாளர்களான இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் 12வது லீக் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இன்று மதியம் 2 மணிக்கு தொடங்குகிறது. முன்னதாக, பிரபல பாடகர்கள் அர்ஜித் சிங், சங்கர் மகாதேவன் மற்றும் சுக்விந்தர் சிங் ஆகியோர் பங்கேற்கும் சிறப்பு இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை பொறுத்தவரையில், இந்தியா பாகிஸ்தான் அணிக்கு எதிராக 100 சதவீதம் வெற்றி பதிவை கொண்டுள்ளது. இவ்விரு அணிகள் மோதிய முந்தைய 7 போட்டிகளில் இந்திய அணியே வெற்றி வாகை சூட்டியுள்ளது. எனவே, இன்றைய போட்டியிலும் இந்தியா அதன் ஆதிக்கத்தை தொடரும். மறுபுறம் பாகிஸ்தான் முதல் வெற்றிக்கு முடிந்தவரை போராடும். அதனால், இவ்விரு அணிகள் மல்லுக்கட்டும் இன்றைய ஆட்டத்தில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை.
நடப்பு உலகக் கோப்பை தொடரில் இரு அணிகளும் முதல் இரண்டு ஆட்டங்களில் வெற்றியுடன் தொடங்கின. இந்தியாஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது. அதேவேளையில், பாகிஸ்தான் நெதர்லாந்து மற்றும் இலங்கையை வீழ்த்தியது. ஆனால், நெதர்லாந்து மற்றும் இலங்கை அணிகள் பாகிஸ்தானுக்கு வலுவான ரன்களை எடுத்து இருந்தன. நெதர்லாந்து 205 ரன்களையும், இலங்கை 344 ரன்களையும் எடுத்து அதிர்ச்சி கொடுத்தன.
இந்த இரண்டு போட்டிகளிலும் பெரிய அளவில் கவனம் ஈர்க்காத பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் இந்தியாவுக்கு எதிராக சிறப்பாக செயல்படுர்களாக என்கிற கேள்வி எழுகிறது. அந்த அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களான அஃப்ரிடி, ராஃப், ஹசன் அலி ஆகியோரில் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் கொடுக்கும் பந்துவீச்சாளர் யார் என்பதை இங்கு சுருக்கமாக பார்க்கலாம்.
அஃப்ரிடியின் தவறான தொடக்கம்
பாகிஸ்தான் தனது இரண்டு போட்டிகளையும் ஐதராபாத்தில் விளையாடியது. அஃப்ரிடி தனது முதல் போட்டியில் 37 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் எடுத்தார். இலங்கைக்கு எதிராக 66 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் எடுத்தார். இருப்பினும், இந்தியா இன்னும் அவரை மிகப்பெரிய அச்சுறுத்தலாகவே பார்க்கும்.
ஏனென்றால், அவர் கடந்த 2021 டி20 உலகக் கோப்பையில் ரோகித் சர்மா மற்றும் கே.எல் ராகுலின் விக்கெட்டுகளை கைப்பற்றி மிரட்டி இருந்தார். அதில் பாகிஸ்தான் இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்த உதவியும் இருந்தார். அந்த நினைவுகள் இந்திய அணி நிர்வாகத்தின் மனதில் இன்னும் பசுமையாக இருக்கும்.
/indian-express-tamil/media/post_attachments/ed371bff-c9f.jpg)
இந்தியாவின் பேட்டர்கள் நல்ல ஃபார்மில் இருக்கலாம், ஆனால் சுப்மன் கில் விளையாடுவதற்கு தகுதியானவராக இருந்தால், அவர்கள் எவ்வளவு ரன் எடுத்தாலும், டாப் ஆடர் முழுவதுமாக வலது கை வீரர்களாக உள்ளனர் என்பதுதான் உண்மை. அவர் இல்லையென்றால், அதில் இஷான் கிஷன் மட்டுமே இடது கை பேட்டராக இருப்பார். மாறாக, ஒரு போட்டியில் அஃப்ரிடி எவ்வளவு மோசமான தொடக்கத்தை எடுத்தாலும், அவர் ஒரு இடது கை வேகப்பந்து வீச்சாளராக இருக்கிறார். இது எப்போதும் இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக இருக்கும்.
ஹசன் அலியின் மிரட்டல்
ஆசியக் கோப்பையில் இவ்விரு அணிகளுக்கும் இடையே நடந்த இரண்டு போட்டிகளிலும் அஃப்ரிடியின் அச்சுறுத்தலை இஷான் கிஷன் முறியடித்து இருந்தார். உண்மையில், அஃப்ரிடி இரண்டாவது போட்டியில் 79 ரன்களை விட்டுக்கொடுத்தார். இது அவரை எதிர்கொள்ள இந்திய அணி திட்டத்தைக் கண்டுபிடித்ததாகத் தெரிகிறது. தற்போதைய பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்களில், அஃப்ரிடி மற்றும் ரவுஃப் ஆகிய இரு வீரர்களையும் சமீபத்திய வெள்ளை பந்து போட்டிகளில் இந்தியர்கள் பல முறை எதிர்கொண்டுள்ளது. ஆனால் ஹசன் அலிக்கு இதையே கூற முடியாது. 29 வயதான நசீம் ஷா காயத்திற்குப் பதிலாக கடைசி நிமிடத்தில் சேர்க்கப்பட்டார். மேலும் அவர் நெதர்லாந்திற்கு எதிராக இரண்டு விக்கெட்டுகளையும், இலங்கைக்கு எதிராக நான்கு விக்கெட்டுகளையும் வீழ்த்தி நல்ல தொடக்கத்தைப் பெற்றுள்ளார்.
/indian-express-tamil/media/post_attachments/4baee3ce-af8.jpg)
பாகிஸ்தான் வென்ற 2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக முகமது அமிரின் மிரட்டலான ஆட்டத்தை பெரும்பாலான ரசிகர்கள் நினைவில் வைத்திருக்கும் அதே வேளையில், ஹசன் அலி அங்கும் சிறப்பாக செயல்பட்டார் என்பது கவனிக்கத்தக்கது. அவர் அந்த ஆட்டத்தில் 16 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். அவரிடம் விக்கெட்டை பறிகொடுத்த 3 வீரர்களில் தோனியும் ஒருவர். தவிர அந்த போட்டியில் தொடரின் வீரராகவும் அவர் இருந்தார்.
/indian-express-tamil/media/post_attachments/026b32c8-0b0.jpg)
இருப்பினும், இந்திய பேட்டிங் வரிசையை காயப்படுத்த பாகிஸ்தானின் சிறந்த பந்தயம், முதல் 10 ஓவர்களில் அஃப்ரிடி விக்கெட் எடுக்க வேண்டும் என்பதுதான். ரோகித் சர்மா, இஷான் கிஷான் மற்றும் விராட் கோலி ஆகியோர் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தால், அது டாப் ஆடரை சிதைத்துவிடும். ராகுல் 5-வது இடத்தில் நல்ல ஃபார்மில் இருக்கும்போது, ரவுஃப், ஹசன் மற்றும் பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர்களுடன் தாக்குதல் தொடுத்தால், ராகுல் நிலையான ஜோடியை அமைக்க திணறுவார். இவர்களுடன் அஃப்ரிடியும் மிடில் ஓவரில் பந்துவீசினால் இந்தியாவின் வெற்றிக் கனவு சிதைந்துபோகும். எனவே, பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களை இந்திய வீரர்கள் எப்படி சமாளிக்கப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“