Shaheen Shah Afridi to marry Shahid Afridi’s daughter Ansha Tamil News: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக வலம் வருபவர் ஷஹீன் ஷா அஃப்ரிடி. இவர் கடந்த 2018ல் பாகிஸ்தான் ஒருநாள் அணிக்காக சர்வதேச அரங்கில் அறிமுகமானார். பின்னர், அதே ஆண்டில் தனது டெஸ்ட் மற்றும் டி20 வாழ்க்கையைத் தொடங்கினார். கடந்த 2021 ஆண்டு இறுதியில் நடந்த டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் முன்னணி வீரர்களின் விக்கெட்டுகளை வீழ்த்திய அதிகம் கவனம் பெற்றார்.
இதனால், இந்த ஆண்டில் நடைபெற்ற ஆசிய கோப்பையில் அவர் மீண்டும் கலக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடந்த ஜூலையில் இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டின் போது ஃபீல்டிங் செய்யும் போது அவர் பின்பக்க க்ரூசியட் லிகமென்ட் (பிசிஎல்) காயத்தால் பாதிக்கப்பட்டார். இதனிடையே அவரால் ஆசிய கோப்பையில் விளையாட முடியாமல் போனது. இருப்பினும், அவர் இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த டி20 உலகக் கோப்பை மீண்டும் கம்பேக் கொடுத்திருந்தார்.

ஷாஹின் அஃப்ரிடியின் பாகிஸ்தான் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியும் இருந்தது. இந்தப்போட்டியில் அவர் டெத் ஓவரில் மைதானத்தை விட்டு வெளியேறும் நிலை நேரிட்டது. அவருக்கு ஏற்பட்ட மற்றொரு காயத்தால் பாகிஸ்தான் அணி பெரும் பின்னடைவை சந்தித்து, இங்கிலாந்திடம் தோற்றது. இந்த தொடருக்குப் பிறகு, அவரின் காயம் முழுமையாக குணமடையாததால் அவர் இங்கிலாந்துக்கு எதிரான பாகிஸ்தான் டெஸ்ட் தொடரில் இருந்தும் நீக்கப்பட்டார். அவர் தனது காயத்திற்காக நான்கு முதல் ஆறு வாரங்கள் ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவ ஆலோசனைக் குழுவால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஷாஹின் அஃப்ரிடி திருமணம்
இந்நிலையில், தற்போது ஓய்வில் இருக்கும் வேகப்பந்து வீச்சாளர் ஷஹீன் ஷா அப்ரிடி பாகிஸ்தான் அணியின் முன்னாள் அதிரடி ஆல்-ரவுண்டர் வீரர் ஷாஹித் அப்ரிடியின் மகள் அன்ஷா அப்ரிடியை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இவர்களின் திருமணம் அடுத்தாண்டு பிப்ரவரி 3 ஆம் தேதி நடைபெறும் என்று கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி, இரு குடும்பத்தினரும் இந்த திருமண விழாவிற்கான ஏற்பாடுகளை ஆரம்பித்துள்ளனர். ஷாஹீன் தனது திருமணத்திற்குப் பிறகு, பிப்ரவரி 13 ஆம் தேதி தொடங்கும் பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் (பிஎஸ்எல்) எட்டாவது பதிப்பில் பிஸியாகிவிடுவார் என்பதால், அன்ஷாவின் ருக்சதி பின்னர் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil