Advertisment

'அக்தரை பார்த்து பயந்ததை சச்சின் ஒப்புக் கொள்ள மாட்டார்' - அப்ரிடி

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
shahid afridi, shoaib akthar, sachin tendulkar, cricket news, sports news, sachin vs akthar, சச்சின், அப்ரிடி, அக்தர், கிரிக்கெட் செய்திகள், விளையாட்டு செய்திகள்

shahid afridi, shoaib akthar, sachin tendulkar, cricket news, sports news, sachin vs akthar, சச்சின், அப்ரிடி, அக்தர், கிரிக்கெட் செய்திகள், விளையாட்டு செய்திகள்

'கட்டதுரைக்கு ஒரண்ட இழுக்குறதே வேலையாப் போச்சு' என்பது போல, பாகிஸ்தானின் ஷாஹித் அப்ரிடி, இந்திய வீரர்களை கிண்டல் செய்வதும், கேலி செய்வதுமாக இந்த கொரோனா காலத்தில் தன்னை எப்போதும் லைம்லைட்டிலேயே வைத்திருக்கிறார்.

Advertisment

சமீபத்த்தில் கூட "நான் எப்போதும் இந்தியாவுடன் விளையாடுவதை ரசித்திருக்கிறேன். நாங்கள் அவர்களை நிறைய முறை வீழ்த்தியுள்ளோம். இந்திய அணியை நாங்கள் தான் அதிக முறை வீழ்த்தியுள்ளோம் என்று நம்புகிறேன், போட்டியின் பின்னர் அவர்கள் எங்களிடம் மன்னிப்பு கேட்காத குறை தான்” என்று சற்று தூக்கலாக காரத்தை சேர்த்து இந்திய ரசிகர்களை வம்புக்கு இழுத்தார்.

விளம்பரத்துக்கு நோ; சொந்த தயாரிப்பில் இயற்கை விவசாய உரம் - தோனி 'அன்டோல்ட் ஸ்டோரி'

இந்நிலையில், இப்போது சச்சின் பக்கம் தன் பார்வையை திருப்பி இருக்கிறார்.

இதுகுறித்து பேட்டியளித்துள்ள அப்ரிடி, " 'அக்தரை கண்டு பயந்திருக்கிறேன்' என்று தானாக ஒருபோதும் சச்சின் சொல்லமாட்டார். அக்தரிடம் இருந்து வந்த சில பந்துகள், சச்சின் மட்டுமல்லாது உலகின் டாப் வீரர்கள் பலரையும் ஆட்டம் காண வைத்துள்ளது.

மிட்-ஆஃப் அல்லது கவர் திசையில் நின்று ஃபீல்டிங் செய்கையில் நாம் இதை கவனிக்க முடியும். அப்போது பேட்ஸ்மேனின் உடல் மொழியை உங்களால் அறிய முடியும். பேட்ஸ்மேன் அப்போது அதிக பிரஷரில் இருப்பதை நீங்கள் பார்க்கலாம். அந்த நிமிடம் சச்சின் சிறந்த நிலையில் இருக்க மாட்டார்.

சச்சினை அக்தர் பயமுறுத்திவிட்டார் என்று நான் சொல்லவில்லை. ஆனால், அக்தரிடம் இருந்து வெளியான சில அபாயகரமான பந்துகள், உலகின் சிறந்த பேட்ஸ்மேன்களையும் பின்வாங்க வைத்திருக்கிறது" என்று கூறியுள்ளார்.

அக்தருக்கு எதிராக மட்டும் சச்சின் இதுவரை 416 ரன்கள் எடுத்திருக்கிறார். ஆவரேஜ் 41.60

குறிப்பாக, 2003 உலகக் கோப்பை போட்டியில் அக்தரின் பந்துகளை சச்சின் பறக்கவிட்டதை உலகறியும். 98 ரன்களில் சச்சினை அக்தர் அவுட் செய்திருந்தாலும், அக்தரை புரட்டியெடுத்து 98 ரன்களை விளாசியிருப்பார் சச்சின்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்” 

Sachin Tendulkar Shahid Afridi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment