scorecardresearch

இனி அப்ரிடியுடன் ஒட்டும் இல்லை உறவும் இல்லை – யுவராஜ், ஹர்பஜன் முடிவு

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷாகித் அப்ரிடி, பிரதமர் மோடியை விமர்சித்தது தான் கிரிக்கெட் உலகில் ஹாட் டாபிக். பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் பகுதிக்குச் சமீபத்தில் சென்ற ஷாகித் அப்ரிடி, “உலகமே கொரோனா எனும் கொடிய நோயினால் பாதிக்கப்பட்டுள்ளது, இதை விட மோசமானது மோடியின் மனமும் இதயமும். காஷ்மீரில் 7 லட்சம் ராணுவத்தினரை குவித்துள்ளார்” என்று கூற இந்திய கிரிக்கெட் வீரர்கள் கொந்தளித்துள்ளனர். What @SAfridiOfficial is saying is not surprising. Pakistan was created on […]

harbhajan singh, shahid afridi, pm modi, narendra modi, harbhajan afridi, cricket news, sports news, yuvraj singh, ஹர்பஜன் சிங், யுவராஜ் சிங், அப்ரிடி, விளையாட்டு செய்திகள், மோடி,
harbhajan singh, shahid afridi, pm modi, narendra modi, harbhajan afridi, cricket news, sports news, yuvraj singh, ஹர்பஜன் சிங், யுவராஜ் சிங், அப்ரிடி, விளையாட்டு செய்திகள், மோடி,
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷாகித் அப்ரிடி, பிரதமர் மோடியை விமர்சித்தது தான் கிரிக்கெட் உலகில் ஹாட் டாபிக்.

பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் பகுதிக்குச் சமீபத்தில் சென்ற ஷாகித் அப்ரிடி, “உலகமே கொரோனா எனும் கொடிய நோயினால் பாதிக்கப்பட்டுள்ளது, இதை விட மோசமானது மோடியின் மனமும் இதயமும். காஷ்மீரில் 7 லட்சம் ராணுவத்தினரை குவித்துள்ளார்” என்று கூற இந்திய கிரிக்கெட் வீரர்கள் கொந்தளித்துள்ளனர்.


ஹர்பஜன், யுவராஜ் ஆகியோர் அப்ரிடியுடன் நெருக்கமாக பழகி வந்தனர். கொரோனா பாதிப்பு காரணமாக, அப்ரிடியின் அறக்கட்டளைக்கு இருவரும் நிதியுதவி அளித்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பிரதமர் பற்றிய அப்ரிடியின் பேச்சு குறித்து கருத்து தெரிவித்துள்ள ஹர்பஜன், “அவர் நமது நண்பர் என்று நான் நினைத்தேன், ஆனால் ஒரு நண்பர் இப்படி நடந்து கொள்ளமாட்டார். கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நல்லெண்ண அடிப்படையில் அவருக்கு உதவிகள் செய்தேன். ஆனால் இனிமேல் அவருடன் எந்த உறவும் இல்லை. இனி அவரை தொடர்பு கொள்ள போவதுமில்லை. மற்றவர்களை எவ்வாறு மதிக்க வேண்டும் என்பதை அவர் கற்றுக் கொள்ள வேண்டும்,

‘இன்று ஏமாற மாட்டேன்’ – தோனியின் ஸ்டெம்பிங்கும், சபீர் கற்ற பாடமும் (வீடியோ)

அவர் இனி என் நண்பர் அல்ல. ஒருவேளை அவர் ஒரு அரசியல் வாழ்க்கையை கவனித்துக் கொண்டிருக்கலாம். ஆனால் அப்படியானால், அவர் அதை தனது சொந்த பலத்திலேயே செய்ய வேண்டும், ஆனால் நமது பிரதமரையும் நம் நாட்டையும் துஷ்பிரயோகம் செய்வதன் மூலம் அல்ல. அப்படி இருந்தால், அவருடைய அரசியல் வாழ்க்கை நீண்ட காலம் நீடிக்கும் என்று நான் நினைக்கவில்லை” என்று அவர் மேலும் கூறினார்.

அதேபோல் கருத்து தெரிவித்த கெளதம் கம்பீர், “சிலருக்கு வயதுதான் ஆகிறதே தவிர மனதளவில் வளர்ச்சி ஏற்படுவதில்லை. அப்ரிடி இப்போதுதான் 16 வயது நபர் போல் பேசுகிறார். உலகமே கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருக்கும்போது காஷ்மீர் பற்றி பேசுகிறார் பிரதமர் மோடியைப் பற்றி அவதூறாகப் பேசுகிறார், இது உங்களுடைய உங்கள் நாட்டுடைய எண்ணங்களை வெளிப்படுத்துகிறது. இது துரதிர்ஷ்டமானது.

பாகிஸ்தானில் ஒருவர் மீது வெளிச்சம் விழ வேண்டுமென்றால் இந்தியாவையும் பிரதமரையும் திட்டினால் போதும். ஏழைகளுக்கு உணவு கொடுக்கச் சென்று விட்டு இப்படிப் பேசலாமா? உங்கள் நாட்டு நிலையை பாருங்கள், அங்கு பணம் இல்லை மக்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நீங்கள் அரசியல் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்.

கொரோனா காலத்திலும் எல்லை வழியாக பயங்கரவாதிகளை அனுப்புகிறீர்கள். கரோனா காலத்திலும் உங்கள் நாடு எல்லை தாண்டிய பயங்கரவாதம் செய்து வருகிறது.

கிரிக்கெட்டில் கூட உங்களை யாரும் சீரியசாகப் பேசுவதில்லை, இப்போது இப்படியெல்லாம் பேசிக்கொண்டிருந்தால் உங்களை யாரும் மதிக்கப்போவதில்லை.” என்று அப்ரிடிக்கு கடுமையாகப் பதிலடி கொடுத்தார்.


இதனையடுத்து யுவராஜ் சிங், மோடிக்கு எதிரான அப்ரிடியின் கருத்தை ஏற்க முடியாது. மனித நேய அடிப்படையில்தான் அவரது முயற்சிக்கு உதவச்சொன்னேன் இனி ஒருபோதும் ஆதரவளிக்க மாட்டோம் என்று ட்வீட் செய்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்” 

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Shahid afridi has crossed all limits no further relations harbhajan singh yuvraj singh