கோவிட் -19 தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில், தனது அறக்கட்டளைக்கு ஆதரவளித்ததற்காக யுவராஜ் சிங் மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துள்ளார் முன்னாள் பாகிஸ்தான் வீரர் ஷாஹித் அப்ரிடி.
யுவராஜ் மற்றும் ஹர்பஜன் சிங் எப்போதுமே தனக்கு ஆதரவளிப்பதில் 'பெரிய தூண்களாக' இருந்ததாகவும், என்று ஷாஹித் அப்ரிடி குறிப்பிட்டுள்ளார்.
31, 2020Thank you for all you support-both yourself & my brother @harbhajan_singh are huge pillars of support; this bond we have shows love & peace transgresses borders when it comes to humanity especially. Best wishes to you with your noble endeavours with @YOUWECAN #DonateKaroNa https://t.co/IVhqywdl3q
— Shahid Afridi (@SAfridiOfficial)
Thank you for all you support-both yourself & my brother @harbhajan_singh are huge pillars of support; this bond we have shows love & peace transgresses borders when it comes to humanity especially. Best wishes to you with your noble endeavours with @YOUWECAN #DonateKaroNa https://t.co/IVhqywdl3q
— Shahid Afridi (@SAfridiOfficial) March 31, 2020
"ஆதரித்த அனைவருக்கும் நன்றி- நீங்களும் என் சகோதரர் ஹர்பஜன் சிங்கும் எனக்கு ஆதரவளிப்பதில் மிகப்பெரிய தூண்கள்; நெருக்கடியின் போது எல்லைகள் தாண்டி நாம் காட்டிய 'அன்பும் சமாதானமும்' மனிதநேயத்தை காட்டுகிறது" என்று அப்ரிடி குறிப்பிட்டுள்ளார்.
பின்ன... சாம்பியன்னா சும்மாவா? - வைரலாகும் ரோஜர் ஃபெடரரின் ட்ரிக் ஷாட்ஸ் வீடியோ
பாகிஸ்தானில் தொற்றுநோயால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உணவு, கிருமிநாசினிகள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருள்களை வழங்குவதற்கான தனது அறக்கட்டளையின் பணிக்காக, முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் உட்பட பல கிரிக்கெட் வீரர்களிடமிருந்து பாராட்டுகளைப் பெற்று வருகிறார் ஷாஹித் அப்ரிடி.
முன்னதாக, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக, ஹர்பஜன் சிங் மற்றும் யுவராஜ் சிங் ஆகியோர் ஷாஹித் அப்ரிடியுடன் இணைந்தனர்.
The world is passing through extremely testing and unprecedented times.Let’s do our bit to help @SAfridiOfficial @SAFoundationN doing gr8 work plz join hands with them nd contribute what ever u can https://t.co/t9OvfEPp79 for covid19 @wasimakramlive @YUVSTRONG12 @shoaib100mph pic.twitter.com/sB2fxCAQqY
— Harbhajan Turbanator (@harbhajan_singh) March 29, 2020
அதேபோல் ஹர்பஜன் சிங்கும், தனது ட்விட்டர் வாயிலாக ஷாஹித் அப்ரிடி அறக்கட்டளைக்கு வேண்டுகோள் வைத்திருந்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.