Advertisment

ஆமா சேவாக்-ன்னா யாரு?: தன்னைப் பற்றிய கமெண்டுக்கு குட்டு வைத்த ஷகிப் அல் ஹசன்

முன்னாள் இந்திய வீரர் வீரேந்திர சேவாக் பேச்சுக்கு பதிலடி தரும் வகையில் ஷகிப் அல் ஹசன், சேவாக்-ன்னா யார்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
shakib al hasan replies to Virender Sehwag Comment video Tamil News

ஷகிப் அல் ஹசன் பற்றிய சேவாக்கின் கருத்துகளைப் பற்றி பகிர்ந்து கொள்ளுமாறு கேட்கப்பட்டது. அதற்கு அவர் "யார்?" என்று குறிப்பிட்டார்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Virender Sehwag | Shakib Al Hasan | T20 World Cup 2024: 9-வது டி20 உலகக்கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில்  கடந்த 2 ஆம் தேதி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்த சுற்றை நோக்கி நகரவிருக்கும் இந்த தொடரில், நெதர்லாந்து - வங்கதேச அணிகள் மோதிய போட்டி நேற்று வியாழக்கிழமை நடந்தது. 

Advertisment

இந்த ஆட்டத்தில் 160 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய நெதர்லாந்து 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனையடுத்து, 25 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணி அபார வெற்றியை பெற்றது. வங்கதேச அணி தரப்பில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அனுபவ வீரர் ஷகிப் அல் ஹசன் 46 பந்துகளில் 64 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார்.

சேவாக் கமெண்ட் 

ஆனால், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் ஷகிப் அல் ஹசன் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார். அப்போது பேசிய இந்திய ஜாம்பவான் வீரரான வீரேந்திர சேவாக், வங்கதேச அணியில் ஷகிப் அல் ஹசன் இடம் பெற்று இருப்பது குறித்து கேள்வியை எழுப்பி இருந்தார். "அதிக அனுபவங்களை கொண்ட வீரர் ஷகிப் அல் ஹசன். வங்கதேச அணியின் கேப்டனாக நீண்ட காலம் செயல்பட்டுள்ளார். ஆனால் டி20 கிரிக்கெட்டில் அவரது செயல்பாடுகள் மோசமான இருந்துள்ளன. இதனை நினைத்து அவர் வெக்கப்பட வேண்டும். 

கடந்த உலகக் கோப்பையின் போது, ​​அவரை இனி டி20 பார்மட்டிற்கு எடுக்கக்கூடாது என்று நினைத்தேன். அவர் ஓய்வு பெறுவதற்கான நேரம் நீண்ட காலத்திற்கு முன்பு வந்தது. அதனால், டி20 கிரிக்கெட்டில் இருந்து ஷகிப் அல் ஹசன் ஓய்வை அறிவிக்க வேண்டும் " என்று அவர் பேசி இருந்தார்.  

ஷகிப் அல் ஹசன் பதிலடி 

இந்த நிலையில், முன்னாள் இந்திய வீரர் வீரேந்திர சேவாக் பேச்சுக்கு பதிலடி தரும் வகையில் ஷகிப் அல் ஹசன், சேவாக்-ன்னா யார்? என்று  கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 

நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டிக்குப் பிறகு ஷகிப் அல் ஹசன்  செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, அவரைப் பற்றிய சேவாக்கின் கருத்துகளைப் பற்றி பகிர்ந்து கொள்ளுமாறு கேட்கப்பட்டது. அதற்கு அவர் "யார்?" என்று குறிப்பிட்டார். 

இது குறித்து ஷகிப் அல் ஹசன் பேசுகையில், "எந்த வீரரும் யாருக்கும் பதில் அளிக்க வேண்டிய அவசியமில்லை. ஒரு வீரரின் பணி என்னவென்றால், அணியின் வெற்றிக்கு உதவுவது தான். பேட்ஸ்மேனாக, பவுலராக, ஃபீல்டராக சிறப்பாக செயல்பட்டு அணியை வெற்றிபெற வைக்க வேண்டும். மற்றபடி யாருக்கும் பதிலளிக்க தேவையில்லை. அதேபோல், ஒரு வீரரால் அணியின்வெற்றிக்கு பங்களிக்க முடியவில்லை என்றால், நிச்சயம் சில விவாதங்கள் வரும். அதில் எந்த தவறும் இல்லை என்று நினைக்கிறேன். ஆனால் எனது ஆட்டம் குறித்து நான் எப்போதும் கவலைக் கொண்டதில்லை.

என் கிரிக்கெட் வாழ்க்கை முழுக்கவே அப்படி தான் இருந்திருக்கிறேன். கிரிக்கெட்டில் ஒருநாள் உங்களுக்கான நாளாக இருக்கும். மற்றொரு நாள் இன்னொரு வீரருக்கான நாளாக இருக்கும். நன்றாக பவுலிங் செய்வதே எனது பணி. விக்கெட் வீழ்த்துவதற்கு கொஞ்சம் அதிர்ஷடமும் தேவை என்று நினைக்கிறேன்" என்று கூறியுள்ளார். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Virender Sehwag Shakib Al Hasan T20 World Cup 2024
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment