சயீத் அன்வர் இதை எப்போதும் மறக்க மாட்டார்; அப்படியொரு சம்பவம் செய்த வார்னே (வீடியோ)

ஒருக்கட்டத்தில் 206-2 என்று மிக வலிமையாக இருந்த ஆஸ்திரேலியா, சக்லைன் முஷ்டக்கின் அபாரமான பந்துவீச்சில் சிக்கி, அடுத்த 8 விக்கெட்டுகளை 40 ரன்கள் எடுப்பதற்குள் இழந்தது

Shane Warne Leg-Break to Saeed Anwar 20 Years Ago Watch Video - சயீத் அன்வர் இதை இப்போதும் மறந்திருக்க மாட்டார்; அப்படியொரு சம்பவம் செய்த வார்னே (வீடியோ)
Shane Warne Leg-Break to Saeed Anwar 20 Years Ago Watch Video – சயீத் அன்வர் இதை இப்போதும் மறந்திருக்க மாட்டார்; அப்படியொரு சம்பவம் செய்த வார்னே (வீடியோ)

20 வருடங்களுக்கு முன்பு ஹோபர்ட்டில் பாகிஸ்தானை ஆஸ்திரேலியா எதிர்கொண்ட இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்றும் ரசிகர்களால் மறக்க முடியாத ஆட்டமாகும்.

வாசிம் அக்ரம் தலைமையிலான பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்ஸில் 222 ரன்கள் எடுக்க, ஸ்டீவ் வாக் தலைமையிலான ஆஸி., முதல் இன்னிங்ஸில் 246 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

ஒருக்கட்டத்தில் 206-2 என்று மிக வலிமையாக இருந்த ஆஸ்திரேலியா, சக்லைன் முஷ்டக்கின் அபாரமான பந்துவீச்சில் சிக்கி, அடுத்த 8 விக்கெட்டுகளை 40 ரன்கள் எடுப்பதற்குள் இழந்தது.

பிறகு, இரண்டாவது இன்னிங்ஸில், பேட்டிங்கிலும் பாகிஸ்தான் ஆதிக்கம் செலுத்தியது. இன்சமாம் 118 ரன்களும், சயித் அன்வர் 78 ரன்களும் எடுக்க, மொத்தமாக 392 ரன்களுக்கு பாகிஸ்தான் ஆட்டமிழந்தது.

இதனால், ஆஸ்திரேலியாவுக்கு 369 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

ப்லேவெட் 29, ஸ்லேட்டர் 27 என்று அவுட்டாக ஜஸ்டின் லாங்கர் அரைசதம் கடந்து சதத்தை நெருங்கிக் கொண்டிருந்தார்.

பிறகு மார்க் வாக் 0 ரன்களிலும், ஸ்டீவ் வாக் 28 ரன்களிலும், ரிக்கி பாண்டிங் 0 ரன்களிலும் அடுத்தடுத்து அவுட்டாக, நம்ம ‘கில்லி’ கில்கிறிஸ்ட் 163 பந்துகளில் 149 ரன்கள் விளாச, 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிப் பெற்றது.

இந்தப் போட்டியிலே பெரிய ஹைலைட்டே சயீத் அன்வர் விக்கெட் தான். பாகிஸ்தானின் இரண்டாவது இன்னிங்ஸ் போது, ஷேன் வார்னேவின் லெக் பிரேக் பந்தில், அன்வரின் லெக் ஸ்டெம்பு, பூமியின் மண் வாசம் பிடிக்காமல், ஆகாயம் பார்க்க கிளம்பிய அந்த மெர்சல் வீடியோ இங்கே,

என்னா டர்னு!!!

Get the latest Tamil news and Sports news here. You can also read all the Sports news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Shane warne leg break to saeed anwar 20 years ago watch video

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com