கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு: சிஎஸ்கே சாம்பியன் வாட்சனுக்கு குவியும் வாழ்த்துகள்

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷேன் வாட்சன், கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவருக்கு ரசிகர்களும் சக கிரிக்கெட் வீரர்களும் பாராட்டுதல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

shane watson, shane watson announced retirement, shane watson retirement, ஷேன் வாட்சன் ஓய்வு, ரிக்கி பாண்டிங் வாழ்த்து, சிஎஸ்கே, ஐபிஎல், ஆஸ்திரேலியா, fans and teammates congrats shane watson, ricky ponting congrats shane watson, sam curran congrats shane watson, csk, ipl, australia cricket player shane watson

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷேன் வாட்சன், ஐபிஎல் 2020 தொடரில் சென்னை அணியின் கடைசி போட்டியில் விளையாடியபின், கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஷேன் வாட்சன் ஓய்வு அறிவித்ததால் ரசிகர்களும் சக கிரிக்கெட் வீரர்களும் அவருக்கு பாராட்டுதல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் ஆல்ரவுண்டராக வலம் வந்த ஷேன் வாட்சன், ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சி.எஸ்.கே) அணிக்காக விளையாடி வந்தார். சி.எஸ்.கே அணியில் ஷேன் வாட்சன் முக்கியமான வீரராக இருந்தார்.

தற்போது, 2020ம் ஆண்டு ஐபிஎல் தொடர் துபாய் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்று வருகிறது. இதில் சென்னை அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியாமல் லீக் ஆட்டங்களுடன் வெளியேறியது. சென்னை அணி எதிர்பார்க்கப்பட்ட அளவுக்கு இந்த தொடரில் விளையாடவில்லை. இந்த ஐபிஎல் தொடருடன் தோனி, ஷேன் வாட்சன் உள்ளிட்ட வீரர்கள் ஓய்வு பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தோனி, ஐபிஎல் போட்டிகளில் ஓய்வு இல்லை என்று கூறினார். ஆனால், நவம்பர் 1-ம் தேதி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டிக்குப் பிறகு, ஷேன் வாட்சன் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

ஷேன் வாட்சன் ஓய்வு அறிவித்ததையடுத்து, அவருக்கு ரசிகர்கள், சக கிரிக்கெட் வீரர்கள் பாராட்டுதல்களையும் ஓய்வுக்குப் பிறகு வாக்கை நன்றாக அமைய வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் டுவிட்டரில் ஷேன் வாட்சனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். “ஷேன் வாட்சன் உங்களுடைய சிறந்த கிரிக்கெட் வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள். உங்களுடன் விளையாடிய ஒவ்வொரு நிமிடத்தையும் நேசித்தேன். நீங்கள் ஒரு சிறந்த அணித் தோழர். உங்களை நெருங்கிய நண்பராக அழைப்பதை நான் விரும்புகிறேன். ஆஸ்திரேலியாவின் மிகவும் மதிப்புமிக்க வீரர்களில் ஒருவர் என்று நான் நினைக்கிறேன். ஓய்வை அனுபவியுங்கள்” என்று ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளார்.

அதே போல, ஆஸ்திரேலிய அணியைச் சேர்ந்தவரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஷேன் வாட்சனுடன் விளையாடிய இளம் வீரர் சாம் கர்ரன், ஷேன் வாட்சனுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

சாம் கர்ரன் தனது டுவிட்டர் பக்கத்தில், “ஒரு அற்புதமான கிரிக்கெட் வாழ்க்கை வாழ்த்துகள் ஷேன் வாட்சன். சி.எஸ்.கே.வில் இந்த ஐபிஎல் சீசனில் உங்களுடன் ஒரு ஒரே டிரஸ்ஸிங் அறையை பகிர்ந்துகொண்டதும் உங்களிடமிருந்து கற்றுக்கொண்டதும் மகிழ்ச்சியாக இருந்தது.” என்று தெரிவித்துள்ளார்.

அதே போல, சி.எஸ்.கே-வில் ஷேன் வாட்சனுடன் தொடக்க வீரராக விளையாடி வந்த ஃபாஃப் டு பிளெஸிஸ் ஷேன் வாட்சன் ஓய்வுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

டு பிளெஸிஸ் டுவிட்டரில் “ஒரு அற்புதமான கேரியர் வாழ்த்துக்கள் ஷேன் வாட்சன். சி.எஸ்.கே.யில் இந்த சீசனில் ஒரு டிரஸ்ஸிங் அறையை பகிர்ந்துகொள்வதும் உங்களிடமிருந்து கற்றுக்கொள்வதும் மகிழ்ச்சியாக இருந்தது.” என்று தெரிவித்துள்ளர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get the latest Tamil news and Sports news here. You can also read all the Sports news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Shane watson retirement csk fans and teammates congrats

Next Story
ஐபிஎல்-2017: மும்பையின் தொடர் வெற்றியை தடுத்து நிறுத்துமா பஞ்சாப்? இரு அணிகளிடேயே இன்று பலப்பரிட்சை
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express