இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், ஷர்துல் தாகூரின் பினிஷிங் டச், அவரை அடுத்த தோனியாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
திமுக கூட்டணி சார்பில் CAAவை எதிர்த்து பேரணி…
இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையேயான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கட்டாக்கில், 22ம் தேதி நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 315 ரன்கள் எடுத்தது.
316 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய இந்திய அணி, வீரர்களின் பொறுப்பான ஆட்டத்தினால், 48.4 ஓவர்களிலேயே 6 விக்கெட்களை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இதன்மூலம், 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.
துவக்க வீரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா மற்றும் கேஎல் ராகுல், தலா 63 மற்றும் 77 ரன்கள் எடுத்தனர். கேப்டன் கோலி, 85 ரன்கள் எடுத்தார். போட்டியின் 46வது ஓவரின் போது கோலி அவுட் ஆனார். 4 ஓவர்களில் 30 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஒரு முனையில் ரவீந்திர ஜடேஜா இருந்தார்.
அனுபவ வீரர்கள் எல்லாம் பெவிலியன் திரும்பியிருக்க, கேப்டன் கோலி அடுத்து யாரை அனுப்பப்போகிறார் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்க, ஷர்துல் தாகூரை, கோலி களமிறக்கினார். ஐபிஎல் போட்டிகளில், ஷர்துல் தாகூரின் திறமையை பார்த்தபிறகே, கோலி இந்த முடிவை எடுத்தார். கோலியின் கணிப்பு பொய்யாகவில்லை. 4 ஓவர்களில் 30 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில், ஜடேஜாவுடன் இணைந்து ஷர்துல் களம் கண்டார். 6 பந்துகளை எதிர்கொண்ட ஷர்துல், ஒரு சிக்சர் உட்பட 17 ரன்களை அதிரடியாக குவித்ததோடு மட்டுமல்லாது, வின்னிங் ஷாட் அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு உதவினார்.
Shardul thakur you fucking game changer..look at #kohli 's reaction..fucking love my Captain #INDvsWI pic.twitter.com/qrislm2yqS
— gaurav lalvani (@LalvaniGaurav) December 22, 2019
இந்திய அணியில், பினிஷிங்க்கு, தோனிக்கு பிறகு சிறந்த பினிஷர் கிடைத்து விட்டதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இவரின் இந்த பினிஷிங் புரட்சி வரும் போட்டிகளிலும் தொடர வேண்டும் என்று அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
இந்த வெற்றியின் மூலம், இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரை 10வது முறையாக வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாது, 2019ம் ஆண்டை, இந்திய அணி தொடர் வெற்றியோடு நிறைவு செய்துள்ளது.