Cricketer Shardul Thakur’s wedding Tamil News: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக ஷர்துல் தாக்கூர் இருக்கிறார். இவர் கடந்த 2017ம் ஆண்டு இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். இதுவரை 8 டெஸ்ட் , 34 ஒருநாள் மற்றும் 25 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 110 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும், 621 ரன்களையும் எடுத்துள்ளார். கடந்த ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த டெஸ்ட் தொடரில் தாக்கூர் ஆல்ரவுண்டர் வீரராக ஜொலித்தார். அதனால் அவருக்கு ‘லார்டு’ தாக்கூர் என்ற செல்லப்பெயர் ரசிகர்களால் வழங்கப்பட்டது.
31 வயதான ஷர்துல் தாக்கூர் மும்பையைச் சேர்ந்த “ஆல் தி பேக்ஸ்” என்ற நிறுவனத்தை நடத்தி வரும் மித்தாலி பருல்கர் என்பவரை காதலித்து வந்தார். இவர்கள் கடந்த நவம்பர் மாதத்தில் நிச்சயதார்த்தம் செய்துகொண்ட நிலையில், இன்று மும்பையில் திருமணம் நடைபெற்றது இதில் நண்பர்கள், உறவினர்கள் என 250 பேர் கலந்துகொண்டனர். இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் போன்ற வீரர்களும் கலந்து கொண்டனர்.

இதனிடையே, நேற்று இரவு நடந்த திருமண சடங்கு நிகழ்ச்சியில் இந்தி பாடல்களுக்கு தாக்கூர் மற்றும் அவரது காதலி உற்சாகமாக நடனமாடினார். ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் அவரது நண்பர்கள் பாடல் பாட, அதற்கு புதுமண தம்பதிகள் இருவரும் நடனமாடி மகிழ்ந்தனர். தற்போது அவர்கள் நடனமாடிய வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு இணையத்தில் வைரலாகி வருகிறது.



Such a lovely video – Shreyas Iyer and Abhishek Nayar were also there. pic.twitter.com/f9mS1CYUGJ
— Mufaddal Vohra (@mufaddal_vohra) February 27, 2023
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil