சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரரின் பெற்றோர்கள் சாலை விபத்தில் படுகாயம்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வரும்   வேகப்பந்து வீச்சாள்  ஷர்குல் தாகூரின் பெற்றோர்கள் சாலை விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஐபிஎல் 2018 ல் 2 வருட தடைக்கு பின்பு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடி வருகிறது. இந்த அணியில், மிதவேகப் பந்துவீச்சாளரான ஷர்குல் தாகூர்  2 கோடியே 60 லட்சம்ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டார். மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த இவரது பெற்றோர்கள் அங்குள்ள பால்கர் பகுதியில் வசித்து வருகின்றனர்.

சம்பவத்தன்று, ஷர்குலின் பெற்றோர்கள், நரேந்திர தாகூர் – ஹன்சா தாகூர்  ஆகியோ திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்  கொள்ள மோட்டர் சைக்கிளின் சென்றுள்ளனர். அப்போது,   எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் தடுமாறியதில், அவர்கள் இருவரும் கீழே விழுந்தனர். இதில், இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

பின்பு, அவர்களை மீட்ட பொதுமக்கள் அருகில் இருந்த அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பெற்றோருக்கு விபத்து ஏற்பட்டத்தை கேள்விப்பட்ட ஷ்ர்குல் தொலைப்பேசி மூலம் தொடர்புக் கொண்டு உடல்நலம் விசாரித்துள்ளார்.

 

×Close
×Close