Shaun Tait fear factor MS Dhoni Tamil News: 16-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், ஜெய்ப்பூரில் நடந்த நேற்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் 77 ரன்கள் எடுத்தார். சென்னை அணி தரப்பில் துஷார் தேஷ்பாண்டே 2 விக்கெட்டுகளையும், தீக்சனா மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சென்னை அணி 20 ஒவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்கள் மட்டுமே எடுத்தது. ராஜஸ்தான் அணியில் ஆடம் சாம்பா 3 விக்கெட்டுகளும், அஸ்வின் 2 விக்கெட்டுகளும் குல்தீப் யாதவ் 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 32 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றிபெற்று மீண்டும் புள்ளி பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியது.
பயம்
இந்நிலையில், நேற்றைய ஆட்டத்தில் சென்னை அணியின் கேப்டன் தோனி பேட்டிங் செய்யாததால் முன்னாள் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஷான் டெய்ட் குழப்பமடைந்தார். மேலும், அணியின் வெற்றிக்கு தேவையான ரன் விகிதம் தொடர்ந்து உயர்ந்து வந்ததால் தோனி அந்தப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று தான் விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஷான் டெய்ட் பேசுகையில், “எம்எஸ் (தோனி) அவர்களுக்கு சிக்ஸர்கள் தேவைப்படும்போது, அவர் பவுண்டரி எல்லையில் அமர்ந்திருப்பதைப் பார்க்கும்போது… ‘யாராவது அவுட் ஆக வேண்டும் என்று நான் நினைத்தேன்.
எம்எஸ் பேட்டிங் செய்யும்போது பந்துவீச்சாளர்களிடையே ‘அந்த பயம்’ இருக்கிறது. அவர் 40 ரன் அல்லது 50 ரன்களாக இருந்தாலும் சரி, நீங்கள் எவ்வளவு சிறந்த பந்துவீச்சாளராக இருந்தாலும் சரி, ‘அங்கு பேட்டிங் செய்வது எம்எஸ் தான்’ என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருப்பீர்கள்.

Photo credit: R. Pugazh Murugan
நடப்பு சீசனில் தோனி இதுவரை நடந்த 8 போட்டிகளில் 4 இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்துள்ளார். அவர் 8வது வீரராகவே களம் புகுந்துள்ளார். இதுவரை 61 ரன்கள் எடுத்துள்ள அவர் ஒரே ஒரு முறை மட்டும் ஆட்டமிழந்துள்ளார். மேலும், தோனியின் ஸ்டிரைக் ரேட் நம்பமுடியாத 196.77 ஆக இருக்கிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil