News about Prithvi Shaw, Umesh Yadav, Ravi Bishnoi, Nitish Rana, india Tamil News: 8வது டி20 உலகக்கோப்பை தொடர் ஆஸ்திரேலிய மண்ணில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது சூப்பர் 12 சுற்று போட்டிகள் நடந்து வரும் நிலையில், அதில் இந்திய களமாடி விளையாடி வருகிறது. இந்தத் தொடர் வருகிற 13 ஆம் தேதியுடன் நிறைவடையும் நிலையில், தொடருக்குப் பிறகு இந்திய அணி நியூசிலாந்து மற்றும் வங்க தேச மண்ணில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20, ஒருநாள், டெஸ்ட் தொடர்களில் விளையாடுகிறது.
நியூசிலாந்து - வங்க தேச தொடருக்கான வீரர்கள் அறிவிப்பு
நியூசிலாந்து மண்ணில் வருகிற நவம்பர் 18 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை சுற்றுப்பயணம் செய்யவுள்ள இந்திய அணி 3 டி-20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று விளையாடுகிறது. இதேபோல், டிசம்பர் 04 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை வங்க தேச மண்ணில் சுற்றுப்பயணம் செய்யவுள்ள இந்திய அணி, அங்கு 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.
இந்த தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி நேற்றைய தினம் அறிவிக்கப்பட்ட நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான இந்திய டி20 அணியை ஹர்திக் பாண்டியாவும், இந்திய ஒருநாள் அணியை ஷிகர் தவானும் வழிநடத்துகின்றனர். இந்த இரு அணிகளிலும் துணை கேப்டனாக ரிஷப் பண்ட் இருப்பார் என்றும், வங்க தேச அணிக்கு எதிரான இந்திய ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணியை வழக்கம் போல் கேப்டன் ரோகித் சர்மா வழிநடத்துவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
🚨 NEWS 🚨: India’s squads for series against New Zealand and Bangladesh announced. #TeamIndia | #NZvIND | #BANvIND
More Details 👇https://t.co/YsToGDBozi— BCCI (@BCCI) October 31, 2022
ஒயிட் பந்தில் அஷ்வின், கார்த்திக் இல்லை
நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்திய ஒருநாள் மற்றும் டி-20 அணியில் ரோஹித் ஷர்மா, விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இதேபோல், ரவிச்சந்திரன் அஸ்வின், டி20 உலகக் கோப்பையில் அணியின் ஸ்பெஷலிஸ்ட் ஃபினிஷரான தினேஷ் கார்த்திக் போன்றோருக்கும் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா தொடருக்கு திரும்பும் பும்ரா
முதுகின் அழுத்தத்தின் காரணமாக டி20 உலகக் கோப்பையில் இருந்து வெளியேற்றப்பட்ட வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, பிப்ரவரி 2023ல் திட்டமிடப்பட்டுள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடக்கும் தொடருக்கு திரும்புவார் என்று தலைமை தேர்வாளர் சேத்தன் சர்மா தெரிவித்தார்.
ஜூலை மாதம் இங்கிலாந்து சுற்றுப்பயணம் முதல் செப்டம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பும்ரா இரண்டு டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள நிலையில், டி20 உலகக் கோப்பையை மனதில் கொண்டு பும்ரா திரும்புவதை "விரைவுபடுத்த" தேர்வாளர்கள் முயற்சித்ததாகவும், ஆனால் இப்போது கூடுதல் எச்சரிக்கையாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஜடேஜாவின் கம்பேக் எப்போது?
இந்திய ஆல்ரவுண்டர் வீரர் ரவீந்திர ஜடேஜா, சமீபத்தில் நடத்த ஆசிய கோப்பையில் காயம் காரணமாக இந்திய அணியில் இருந்து விலகினார். தற்போது அவர் பெங்களுருவில் அறுவை சிகிச்சை செய்து, காயத்தில் இருந்து மீண்டு வருகிறார். அவர் வங்க தேச அணிக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடருக்கான அணியில் இடம் பிடித்துள்ளார். ஆனால், அவரின் உடற்தகுதியை பொறுத்தே அவர் தொடருக்கு அழைக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஷா, சர்பராஸ் தேர்வு செய்யப்படவில்லை
பிரித்வி ஷா மீண்டும் எந்த அணியிலும் இடம் பெறவில்லை. தற்போது நடைபெற்று வரும் சையத் முஷ்டாக் அலி டி20 டிராபியில் மும்பை அணிக்காக ஷா 47.50 சராசரி மற்றும் 191.28 ஸ்ட்ரைக் ரேட்டில் 285 ரன்கள் எடுத்துள்ளார். இளம் தொடக்க ஆட்டக்காரரான அவருக்கு "மிக விரைவில்" வாய்ப்பு கிடைக்கும் என்று சேத்தன் சர்மா கூறியுள்ளார்.
இதேபோல், மும்பை மிடில்-ஆர்டர் பேட்ஸ்மேனான சர்ஃபராஸ், முந்தைய ரஞ்சி டிராபியில் 122.75 சராசரியுடன் நான்கு சதங்கள் உட்பட 982 ரன்களுடன் முன்னணி ரன்களை எடுத்தவராக இருந்தார். அவரும் தேர்வு செய்யப்படாத நிலையில், அவர் இந்தியா 'ஏ' அணிகளில் ஒரு பகுதியாக இருந்தபோது, அவர் தேசிய அழைப்பிற்காக "கூடுதல் கடினமாக" உழைக்க வேண்டியிருக்கும் என்று தலைமை தேர்வாளர் சேத்தன் சர்மா கூறியுள்ளார்.
கைவிடப்பட்ட விஹாரி, பிஷ்னோய்
ஜூலை மாதம் இங்கிலாந்துக்கு எதிரான இந்தியாவின் கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடிய ஹனுமா விஹாரி, வங்கதேசத்திற்கான டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்தியா இப்போதெல்லாம் மூன்று மிடில்-ஆர்டர் பேட்ஸ்மேன்களுடன் மட்டுமே விளையாடுகிறது. மேலும் தேர்வாளர்கள் ஷுப்மான் கில்லை ஒரு மிடில்-ஆர்டர் விருப்பமாக பார்க்கிறார்கள் என்று சேத்தன் சர்மா கூறினார், இதனால், விஹாரிக்கு இடமில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
நிரம்பிய மிடில் ஆர்டர் என்பது, தலைமை தேர்வாளரின் கூற்றுப்படி, அஜிங்க்யா ரஹானே உள்நாட்டு கிரிக்கெட்டில் பெரிய ரன்களை எடுக்க வேண்டும் என்பதாகும். மேலும், நியூசிலாந்து டி20 போட்டிகளுக்கு யுஸ்வேந்திர சாஹலுடன் குல்தீப் யாதவ் தேர்வு செய்யப்பட்டதால், டி20 உலகக் கோப்பைக்கான ரிசர்வ் ஸ்பின்னரான ரவி பிஷ்னோய்க்கு இடம் கிடைக்கவில்லை.
சென், தயாள், மாலிக்-கிற்கு வாய்ப்பு
வேகப்பந்து வீச்சாளர்கள் குல்தீப் சென் (மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ராயல்ஸ்) மற்றும் யஷ் தயாள் (உத்தர பிரதேசம், குஜராத் டைட்டன்ஸ்) ஆகியோர் முறையே நியூசிலாந்து மற்றும் வங்காளதேச ஒருநாள் போட்டிகளுக்கு முதல் அழைப்புகளை பெற்றுள்ளனர். இருவரும் சமீபத்தில் நியூசிலாந்து ‘ஏ’ தொடரில் இந்தியா ‘ஏ’ அணியில் இடம்பிடித்திருந்தனர். மேலும், அயர்லாந்து மற்றும் இங்கிலாந்தில் மூன்று டி20 போட்டிகளில் விளையாடிய இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளரான உம்ரான் மாலிக், நியூசிலாந்து சுற்றுப்பயணத்திற்கு திரும்பியுள்ளார்.
வலைதளத்தில் மறைமுகமாக சாடிய இந்திய வீரர்கள்
நியூசிலாந்து மற்றும் வங்க தேச அணிகளுக்கு எதிரான தொடரில் இந்திய வீரர்கள் பிரித்வி ஷா, நிதிஷ் ரானா, ரவி பிஷ்னோய், உமேஷ் யாதவ் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படாத நிலையில், அவர்கள் தங்களது அதிருப்தியை சமூக வலைதளங்கள் வாயிலாக தெரிவித்துள்ளனர்.
இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளரான ரவி பிஷ்னோய் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், "மீண்டும் திரும்புவது எப்போதும் பின்னடைவை விட வலிமையானது'' எனப் பதிவிட்டுள்ளார். பிரித்வி ஷா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் சாய் பாபாவின் புகைப்படத்தை பகிர்ந்து, ''சாய் பாபா.. நீ அனைத்தையும் பார்க்கிறாய் என நம்புகிறேன்..'' என்று குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல், வங்க தேசத்துக்கு எதிரான டெஸ்ட் அணியில் மட்டும் இடம்பிடித்துள்ள உமேஷ் யாதவும் தனது அதிருப்தியை வெளிப்படுத்தி இருக்கிறார். அவர் தனது இன்ஸ்டா ஸ்டோரியில், "நீங்கள் என்னை ஏமாற்றலாம், ஆனால் கடவுள் உங்களை கவனித்துக் கொண்டிருக்கிறார்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்திய வீரரான நிதிஷ் ராணா, "(நம்பிக்கை) - வலி முடிவடைகிறது (Hope) - Hold On Pain Ends" என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவுகள் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வரும் நிலையில், அவை இணையம் மற்றும் சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.
அந்தப் பதிவுகள் இங்கே:
Instagram story of Prithvi Shaw, Umesh Yadav, Ravi Bishnoi and Nitish Rana - Players are disappointed and emotional too. pic.twitter.com/L5SDuHaVXn
— CricketMAN2 (@ImTanujSingh) October 31, 2022
நியூசிலாந்து மற்றும் வங்க தேச தொடருக்கான இந்திய அணி வீரர்கள் பட்டியல் பின்வருமாறு:
நியூசிலாந்து தொடருக்கான இந்திய டி20 அணி: ஹர்திக் பாண்டியா (கேப்டன்), ரிஷப் பந்த் (துணை கேப்டன்), ஷுப்மன் கில், இஷான் கிஷன், தீபக் ஹூடா, சூர்ய குமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷல் படேல் , முகமது. சிராஜ், புவனேஷ்வர் குமார், உம்ரான் மாலிக்.
ஒருநாள் அணி :- ஷிகர் தவான் (கேப்டன்), ரிஷப் பந்த் (துணை கேப்டன்), ஷுப்மன் கில், தீபக் ஹூடா, சூர்ய குமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், ஷாபாஸ் அகமது, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங் , தீபக் சாஹர், குல்தீப் சென், உம்ரான் மாலிக்
வங்க தேச தொடருக்கான இந்திய ஒருநாள் அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல். ராகுல் (துணை கேப்டன்), ஷிகர் தவான், விராட் கோலி, ரஜத் படிதார், ஷ்ரேயாஸ் ஐயர், ராகுல் திரிபாதி, ரிஷப் பந்த் , இஷான் கிஷன் , ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, முகமது. சிராஜ், தீபக் சாஹர், யாஷ் தயாள்
டெஸ்ட் அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல். ராகுல் (துணை கேப்டன்), ஷுப்மன் கில், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த், கே.எஸ். பாரத், ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ். , ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, முகமது. சிராஜ், உமேஷ் யாதவ்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.