Shikhar Dhawan – Washington Sundar Tamil News: இந்திய மண்ணில் சுற்றுப்பயணம் செய்து வரும் தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான டி-20 தொடர் கடந்த 28 ஆம் தேதி முதல் தொடங்கியது. கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் நடந்த முதல் டி-20 ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்து வருகிறது.
தவான் வழிநடத்தும் ஒருநாள் அணி
இந்த தொடர் முடிந்தவுடன் இரு அணிகளுக்கும் இடையே 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் அக்டோபர் 6 ஆம் தேதி முதல் நடைபெறவிருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணியை மூத்த வீரர் ஷிகர் தவான் வழிநடத்துகிறார். அவருக்கு உறுதுணையாக சஞ்சு சாம்சன் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

பரிதாபங்கள் ரீல்ஸ் விட்ட தவான் – சுந்தர் ஜோடி
இந்நிலையில், தவான் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தருடன் இணைந்து செய்துள்ள பரிதாபங்கள் ரீல்ஸ் வீடியோ இணையத்தை கலக்கி வருகிறது. தற்போது மூத்த வீரர் தவான் பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி பெற்று வருகிறார். அங்கு இருந்த வண்ணம் அன்றாட தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸ் செய்து வெளியிட்டு வருகிறார்.
அந்தவகையில், வாஷிங்டன் சுந்தருடன் சேர்ந்து செய்த இன்ஸ்டா ரீல்ஸ் வீடியோவை தற்போது வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோவில் வரும் ஆடியோ, தமிழ் யூட்டியூப் சேனலான பரிதாபங்களில் வரும் ஒரு காட்சியை கொண்டதாகும். அதை எடுத்து இந்த இரு வீரர்களும் சேர்ந்து காமெடி செய்துள்ளது, பார்ப்போருக்கு புன்னகையை தவழ விடும் விதமாக உள்ளது.
அந்த வீடியோவில், ஷிகர் தவானுக்கு வாஷிங்டன் சுந்தர் தலையில் மசாஜ் செய்து விடுவது போன்றும், அப்போது “வெள்ளிக்கிழமை மங்களம் பொங்க” என்ற பாடலை பாடிக்கொண்டு நடித்துள்ளனர். இந்த தமிழ் வரிகளை ஷிகர் தவானும் கற்றுக்கொண்டு, உதடு அசைவுகளை சரியாக கொடுத்துள்ளார். தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வரும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
சுந்தரின் உடல்நிலை அப்டேட்
தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் தற்போது காயம் காரணமாக பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் இருந்து வருகிறார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் பெரிதும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil