நியூசிலாந்து அணிக்கெதிரான ஆட்டத்தில் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்ஸன் நீக்கப்பட்டார். இது தொடர்பாக புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
நியூசிலாந்து- இந்தியா அணிகள் விளையாடிய 2ஆவது ஒருநாள் போட்டி மழை குறுக்கீடு காரணமாக ரத்து செய்யப்பட்டது. இந்த ஆட்டத்தில் சஞ்சு சாம்ஸன் சேர்த்துக் கொள்ளப்படவில்லை.
இது குறித்து ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. இன்று ரத்து செய்யப்பட்ட போட்டியில் இந்திய அணி 12.5 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு இந்தியா 89 ரன்கள் எடுக்கப்பட்டது.
இந்த நிலையில் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது குறித்து பேசிய கேப்டன் ஷிகர் தவான், “வானிலை நமது கையில் இல்லை. ஆனால் மழை விடவில்லை.
இன்றைய ஆட்டத்தில் மைதானமும் எனக்கு அதிர்ச்சி கொடுத்தது. ஏனெனில் மைதானம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என நினைத்தேன். ஆனால் பேட்டிங்-க்கு சாதகமாக மைதானம் காணப்பட்டது” என்றார்.
மேலும், “அணியில் ஒரு பந்துவீச்சாளர் அதிகமாக இருக்க வேண்டும் என்ற காரணத்தினால் சஞ்சு சாம்ஸனுக்கு ஓய்வு அளித்ததாகவும் அவர் கூறினார்.
அதாவது இன்றைய ஆட்டத்தில் சஞ்சு சாம்ஸனுக்கு பதிலாக தீபக் ஹூடா நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் சஞ்சு சாம்ஸன் அணியில் இருந்து நீக்கப்பட்டதற்கு எதிராக ஆஷிஷ் நெஹ்ரா உள்ளிட்ட முன்னாள் வீரர்களும், ரசிகர்களும் கேள்வியெழுப்பியுள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil