/tamil-ie/media/media_files/uploads/2017/09/Shikhar-dhawan.jpg)
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி களமிறங்கவுள்ள வேளையில், தற்போது நல்ல ஃபார்மில் உள்ள முன்னணி வீரர் ஷிகார் தவான் மீது இரு சக்கர வாகனத்தால் அவரது மகன் மோதியதில் அவர் லேசான காயமடைந்திருப்பதாக தெரிகிறது.
இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரு 20 ஓவர் போட்டிகளில் விளையாடி யது. இரு அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கிலும், ஒருநாள் போட்டி தொடரை 5-0 என்ற கணக்கிலும், ஒரு 20 ஓவர் போட்டியிலும் வெற்றி பெற்ற இந்திய அணி, இலங்கையை "ஒயிட்வாஷ்" செய்தது.
இலங்கையுடனான போட்டிகளில் டெஸ்ட் தொடரில் விளையாடிய ஷிகார் தவான் ஒரு நாள் போட்டி தொடரின் போது, உடல்நிலை சரியில்லாத தனது தாயை காண இந்தியா வந்துவிட்டார். எனினும், இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில், தொடர் நாயகன் விருதை ஷிகார் தவான் வென்றிருந்தார்.
இந்நிலையில், இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் செய்துள்ள ஆஸ்திரேலிய அணி ஐந்து ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் மோதுகிறது. முதல் போட்டி வரும் 17-ம் தேதி சென்னையில் தொடங்குகிறது. இதற்காக, ஆஸ்திரேலிய அணியும் சேப்பாக் மைதானத்தில் நேற்று முதல் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.
Took Zoraver for a bike ride and Spike giving me accompany..????????????????????????????????
A post shared by Shikhar Dhawan (@shikhardofficial) on
இதனிடையே, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷிகார் தவான் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை பார்க்கும் போது, அவர் வெளிநாட்டில் இருப்பது போன்று உள்ளது. நன்றாக காற்று வீசுவதும் தெரிகிறது. மேலும், அந்த வீடியோவில், சால்வை ஒன்றை போர்த்திக் கொண்டு தனது மகனுடன் ஷிகார் தவான் நடந்து செல்கிறார். அவரது மகன் சிறிய இரு சக்கர வாகனத்தை ஒட்டிக் கொண்டு வருகிறான். திடீரென தனது தந்தையின் கால் மீது தனது வாகனத்தால் அவன் மோதுகிறான். இதில், ஷிகார் தைவானுக்கு லேசான காயமேற்பட்டதாக தெரிகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.