/tamil-ie/media/media_files/uploads/2019/06/z1017.jpg)
shikhar dhawan out of world cup 2019 rishabh pant includes - உலகக் கோப்பையில் இருந்து ஷிகர் தவான் நீக்கம்; ரிஷப் பண்ட் அணியில் இணைகிறார் - இந்திய கிரிக்கெட் நிர்வாகம்
உலகக் கோப்பை 2019 கிரிக்கெட் தொடரில், காயம் காரணமாக இந்திய அணியில் இருந்து தொடக்க வீரர் ஷிகர் தவான் நீக்கப்படுவதாக இந்திய அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
உலகக் கோப்பை தொடரில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் சதம் விளாசிய தொடக்க வீரர் ஷிகர் தவானுக்கு இடது கை விரலில் காயம் ஏற்பட்டது. இதனால், அவர் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விளையாடவில்லை. தொடர்ந்து கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தார். ரிஷப் பண்ட் ரிசர்வ் வீரராக அறிவிக்கப்பட்டிருந்தார்.
June 2019Team India Manager Sunil Subramaniam: Shikhar Dhawan has a fracture at the base of the first metacarpal of his left hand. He will remain in cast until mid-July which rules him out of ICC World Cup. We have requested Rishab Pant as the replacement. pic.twitter.com/unWcLphsWO
— ANI (@ANI)
Team India Manager Sunil Subramaniam: Shikhar Dhawan has a fracture at the base of the first metacarpal of his left hand. He will remain in cast until mid-July which rules him out of ICC World Cup. We have requested Rishab Pant as the replacement. pic.twitter.com/unWcLphsWO
— ANI (@ANI) June 19, 2019
இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய இந்திய அணியின் மேனேஜர் சுனில் சுப்பிரமணியம், "காயம் காரணமாக உலகக் கோப்பையில் இருந்து ஷிகர் தவான் நீக்கப்படுகிறார். அவருக்கு பதில் ரிஷப் பண்ட் அணியில் இணையுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறார்" என்று தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.