Shikhar-dhawan: இந்திய அணியின் பிரபல கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான். இவர் கடந்த 2012ஆம் ஆண்டு அக்டோபர் 12ஆம் தேதி ஆயிஷா முகர்ஜி என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆயிஷா முகர்ஜி மெல்போர்னைச் சேர்ந்த முன்னாள் கிக்பாக்ஸர் ஆவார். தேசிய மற்றும் சர்வதேச அளவில் விளையாடி உள்ளார்.
48 வயதான ஆயிஷா ஷிகர் தவானை விட 12 வயது மூத்தவர். அவர் அடிப்படையில் ஆங்கிலோ-இந்தியன், பிரிட்டிஷ் வம்சாவளியைச் சேர்ந்த இந்திய தந்தை மற்றும் தாய்க்கு பிறந்தவர். அவரது குடும்பம் அவர் பிறந்த பிறகு ஆஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்தது.
தவான் - ஆயிஷா இருவருக்கும் பேஸ்புக் மூலம் நட்பு ஏற்பட்டுள்ளது. தவானை திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு ஆயிஷா ஆஸ்திரேலிய தொழிலதிபரை முதலில் திருமணம் செய்து இருந்தார். அவர்களுக்கு 2 குழந்தை உள்ளது.
இந்நிலையில், தவானின் எட்டு வருட திருமணம் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்தில் முடிந்தது. தற்போது தவானும் அவரது மனைவி ஆயிஷா முகர்ஜியும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இருவரும் விவாகரத்து மற்றும் அவர்களது குழந்தை தொடர்பாக இந்தியாவிலும் ஆஸ்திரேலியாவிலும் சட்ட நடவடிக்கைகளைத் மேற்கொண்டு வருகின்றனர். மகன் ஜோரவர் தற்போது ஆயிஷாவுடன் ஆஸ்திரேலியாவில் வசித்து வருகிறார்.
தவான் கடந்த ஒரு வருடமாக தனது மகன் ஜோராவரை நேரில் சந்திக்க முடியவில்லை என்றும், தனது மகனுடன் இணைக்கக்கூடிய அனைத்து தளங்களிலிருந்தும் தடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தவான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவை பதிவிட்டுள்ளார்.
அதில், "உன்னை நேரில் பார்த்து ஒரு வருடம் ஆகிறது, இப்போது, கிட்டத்தட்ட மூன்று மாதங்களாக, நான் எல்லா இடங்களிலும் தடுக்கப்பட்டிருக்கிறேன், அதனால், என் மகனே, உனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவிக்க அதே படத்தை வெளியிடுகிறேன்.
என்னால் உன்னை நேரடியாக தொடர்பு கொள்ள முடியாவிட்டாலும், டெலிபதி மூலம் உன்னை தொடர்பு கொள்கிறேன். உன்னை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன், நீ சிறப்பாகச் செயல்படுகிறாய், நன்றாக வளர்கிறாய் என்பதை நான் அறிவேன்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“