நீச்சல், டைவிங்கிலும் அசகாய சூரர்களாக திகழும் இந்திய கிரிக்கெட் வீரர்கள்.. (வீடியோ)

Shikhar dhawan : அதேமைதானத்திலேயே 3வது போட்டியும் நடைபெற உள்ளதால், இந்திய அணி வீரர்கள் பயணம் மேற்கொள்ளவேண்டிய அவசியம் இல்லாதநிலை ஏற்பட்டுள்ளது.

By: August 13, 2019, 7:58:58 PM

இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்ட வீரர்கள் போர்ட் ஆப் ஸ்பெயினில் நீச்சல் மற்றும் டைவிங்கில் நிகழ்த்திய சாகசத்தை இன்ஸ்டாகிராமில் வீடியோவாக வெளியிட்டுள்ளனர்.

வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, அங்கு டுவென்டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் பங்கேற்றுள்ளது. டிவென்டி20 கிரிக்கெட் தொடரை, இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வென்றது. நடந்துமுடிந்த 2 ஒருநாள் தொடர்களில் 1-0 கணக்கில் வென்றது. 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி, போர்ட் ஆப் ஸ்பெயின் மைதானத்திலேயே நடைபெற்றது. அதேமைதானத்திலேயே 3வது போட்டியும் நடைபெற உள்ளதால், இந்திய அணி வீரர்கள் பயணம் மேற்கொள்ளவேண்டிய அவசியம் இல்லாதநிலை ஏற்பட்டுள்ளது.

View this post on Instagram

Open water, the greenery and fresh air = bliss. ????

A post shared by Shikhar Dhawan (@shikhardofficial) on

இதனை சாதகமாக்கி கொண்ட தவான், ஸ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்ட வீரர்கள் வெஸ்ட் இண்டீசின் போலார்ட் உள்ளிட்டோருடன் இணைந்து அருவிகளில் சாகசங்களை நிகழ்த்தி அந்த வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளனர்.

View this post on Instagram

You can’t tell me I ain’t fly!

A post shared by Shreyas Iyer (@shreyas41) on

தவான் தடுமாற்றம் : உலககோப்பை தொடரின் போது காயமடைந்த தவான், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டுவென்டி20 தொடரில் 3 இன்னிங்சும் சேர்த்து 26 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.

அசத்தும் ஐயர் : டுவென்டி20 அணியில் இடம்பெறாமல், ஒருநாள் தொடரில் இடம்பிடித்துள்ள ஸ்ரேயாஸ் ஐயர், ஒருநாள் கிரிக்கெட்டில் மூன்றாவது அரைசதம் கடந்து அசத்தியுள்ளார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

Web Title:Shikhar dhawan shreyas iyer kieron pollard

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X