‘தோ மஸ்தானே சலே ஜிந்தகி பனானே’ – கோலி, அனுஷ்கா தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்த தவான்!

ஷிகர் தவான், தனது ஸ்டைலில் கோலி – அனுஷ்கா தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்து இன்ஸ்டாகிராமில் அதை பதிவிட்டுள்ளார்.

ஒருவழியாக கோலி – அனுஷ்கா காதல் கிசுகிசுக்களை வைத்து அவல் மென்றுக் கொண்டிருந்தவர்களுக்கு கல்யாண சாப்பாட்டையே பரிமாறி விட்டனர் இருவரும். நேற்று (திங்கள்) இத்தாலியின் டஸ்கனி நகரில் அனுஷ்காவை திருமணம் செய்தார் விராட் கோலி. நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் மட்டுமே இவர்களது திருமண விழாவில் கலந்து கொண்டனர்.

தற்போது உலகம் முழுவதிலும் இருந்து இந்த ஜோடிகளுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது. கோலியின் சிறுவயது நாயகனான சச்சின் டெண்டுல்கர் உட்பட பல பிரபலங்கள் இந்த ஜோடிக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து, இந்திய அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவான், இதுவரை வெளிவராத புகைப்படம் ஒன்றை பதிவிட்டு, தனது ஸ்டைலில் புது தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்து இன்ஸ்டாகிராமில் அதை பதிவிட்டுள்ளார்.

அவர் தனது பதிவில், “தோ மஸ்தானே சலே ஜிந்தகி பனானே. இருவரது திருமண வாழ்க்கை மகிழ்ச்சியுடன் அமைய இருவருக்கும் வாழ்த்துகள்” என குறிப்பிட்டுள்ளார். அதாவது, “இரு நெருக்கமான காதலர்கள் தங்கள் வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கிறார்கள்” என்று கூறியுள்ளார். இது பிரபல பாலிவுட் படத்தின் பாடல் வரி என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமில்லாமல், ஒரு புகைப்படம் ஒன்றையும் அதனுடன் இணைத்துள்ளார். அதில், ஒரு ஸ்கூட்டியில் தவான், அவரது மனைவி ஆயிஷா மற்றும் மகன் சொராவர் ஆகியோர் அமர்ந்திருக்க, மற்றொரு ஸ்கூட்டியில், கோலி அனுஷ்காவுடன் அமர்ந்துள்ளார்.

Get the latest Tamil news and Sports news here. You can also read all the Sports news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Shikhar dhawan wishes do mastane virat kohli and anushka sharma on wedding

Next Story
விராட் கோலியின் மனைவி ஆனார் அனுஷ்கா ஷர்மா! மணவிழாக் காட்சிகள்virat kohli, anushka sharma marriage
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com