“ஆட்டத்தை முடித்து வைக்கவே எனக்கு சம்பளம் தருகிறார்கள்” – டெல்லி வீரர் ஹெட்மையர்!

Delhi Capitals’s shimron hetmyer ipl interview after csk match win tamil: போட்டியை கடைசி வரை நின்று வெற்றிகரமாக முடித்து வைக்க தான் தனக்கு சம்பளம் தருகிறார்கள் என்று டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் வீரர் ஷிம்ரோன் ஹெட்மையர் தெரிவித்துள்ளார்

Shimron Hetmyer Tamil News: shimron hetmyer ipl interview tamil

Shimron Hetmyer Tamil News: ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் நேற்றைய லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. மிகவும் விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் சென்னை அணியை 3 விக்கெட்டுகள் வீழ்த்தியது டெல்லி அணி. இதனால், அந்த அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. எனவே முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 136 சேர்த்தது. இதனால், டெல்லி அணிக்கு 137 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

தொடர்ந்து 137 ரன்கள் கொண்ட இலக்கை துரத்திய டெல்லி அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில், சென்னையின் ஜோஷ் ஹேசில்வுட் வீசிய 18.4 வது ஓவரில் சிக்ஸர் அடித்து ஆட்டத்தில் திருப்பு முனையை ஏற்படுத்தினார் ஷிம்ரோன் ஹெட்மையர். மேலும் அவர் 18 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து டெல்லி அணியை வெற்றி பெறச் செய்தார்.

இந்நிலையில், போட்டிக்கு பிந்தைய நேர்காணலில் பேசிய ஷிம்ரோன் ஹெட்மையர், “போட்டியை கடைசி வரை நின்று வெற்றிகரமாக முடித்து வைக்க வேண்டும், இதற்காக தான் எனக்கு சம்பளம் தருகிறார்கள். முடிந்தவரை அணியை வெற்றி பெற வைக்க முயற்சி செய்கிறேன்.” என்று கூறினார்.

மேலும் அவர் பேசுகையில், “நான் அடித்த பந்தை கேட்ச் பிடிக்காமல் விட்டதற்கு நன்றி. பந்தை பேட்டிற்கு நன்கு வரவிட்டு அடிக்க வேண்டும். 19-வது ஓவர் மிக முக்கியமானதாக அமைந்தது. அந்த ஓவரில் சிக்சர் அடிக்க முயற்சி செய்தேன். பிராவோவுக்கு எதிராக அதிக பந்துகளை சி.பி.எல் லீக் தொடரில் சந்தித்தது இந்த போட்டியில் உதவிகரமாக இருந்தது” என்றும் ஷிம்ரோன் ஹெட்மையர் தெரிவித்துள்ளார்.

டெல்லி கேப்பிடல்ஸ் அணி அதன் கடைசி லீக் ஆட்டத்தில் பெங்களூரு அணியை துபாயில் வைத்து எதிர்கொள்கிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Sports news here. You can also read all the Sports news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Shimron hetmyer tamil news shimron hetmyer ipl interview tamil

Next Story
ராஜஸ்தானை பந்தாடிய மும்பை; 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மிரட்டல் வெற்றி!RR vs MI Live Score in tamil: RR vs MI Live Score, match highlights in tamil:
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com